Battery Mobile Logo Top

கடல் ஆழத்துல இருக்கும் துளைகள்.. "இது எப்படி உருவாகுதுன்னு எங்களுக்கே தெரில.. ஆனா அடிக்கடி நடக்குது"..பொதுமக்கள் கிட்ட HELP கேட்ட ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் மர்ம துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இவை எப்படி உருவாகிறது என்பது தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் ஆழத்துல இருக்கும் துளைகள்.. "இது எப்படி உருவாகுதுன்னு எங்களுக்கே தெரில.. ஆனா அடிக்கடி நடக்குது"..பொதுமக்கள் கிட்ட HELP கேட்ட ஆராய்ச்சியாளர்கள்..!

Also Read | வீட்டு வாசல்ல கிடந்த வயர்.. எடுக்கப்போன அப்பா... மகன் கண்முன்னாடியே நடந்த துயரம்..!

கடல்

ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக விளங்கிவருகிறது கடல். உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் கடலே இருந்தாலும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு நாளும் கடல் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் உலக பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சீரான துளைகள் ஆராய்ச்சியாளர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆராய்ச்சி

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் அருகே நீருக்கு அடியில் இருக்கும் எரிமலைப்பகுதியை ஆராய்ந்து வருகிறது இந்த அமைப்பு. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வின் போது 3 கிலோமீட்டர் ஆழத்தில் கடலின் தரைப்பரப்பில் மர்ம துளைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர் இந்த குழுவினர்.

இந்த துளைகள் சீராகவும், ஒரே நேர்க்கோட்டிலும் அமைந்திருப்பது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது முதல்முறை அல்ல எனவும் இதற்கு முன்னரே இப்படியான துளைகள் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கே தெரில

இதுகுறித்து தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் பகிர்ந்துள்ள அறிக்கையில்,"சனிக்கிழமை அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் சீரான துளைகளை கண்டறிந்தோம். இதேபோல துளைகள் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றின் தோற்றம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இவை ஏறக்குறைய மனிதனால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் துளைகளைச் சுற்றியிருக்கும் சிறிய வண்டல் குவியல்கள், ஏதோவொன்றால் தோண்டியெடுக்கப்பட்டவை போல காட்சியளிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த பதிவில் இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் பொதுமக்கள் இதுபற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "மகன் பிறந்துட்டான்னு குஷில இப்படி ஒரு பெயர் வச்சுட்டோம்.. அதுவே இப்போ சிக்கலா ஆகிடுச்சு".. தவிக்கும் பெற்றோர்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்..!

SCIENTISTS, SCIENTISTS DISCOVERS, ATLANTIC, ATLANTIC SEAFLOOR, HOLES

மற்ற செய்திகள்