11,000 வருஷமா குகைக்குள் இருந்த அரிய பொக்கிஷம்..! ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்.!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் உள்ள பழமையான குகை ஒன்றில் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதரின் எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. அதனுடன் பல விதமான அரிய பொருட்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பிரிட்டன் வரலாற்றிலேயே முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

11,000 வருஷமா குகைக்குள் இருந்த அரிய பொக்கிஷம்..! ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்.!!!

                               image Credit : University of Central Lancashire

Also Read | 18 வயசு இளைஞரா மாறனும்.. வருஷத்துக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் 45 வயது தொழிலதிபர்.. 2 வருஷத்துக்கு அப்புறம் நடந்த மேஜிக்..!  

பிரிட்டனின் கிரேட் உர்ஸ்விக்கில் உள்ள ஹீனிங் வூட் குகையில் கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த குகையில் பழங்கால மனிதர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் எனவும் பண்டைய இங்கிலாந்து குறித்த ஆய்வுக்கு இந்த குகை பல வழிகளை கொடுக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். கடைசியில் அந்த நம்பிக்கை ஜெயித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Scientists discover the remains of a man in a cave in Cumbria

image Credit : University of Central Lancashire

சமீபத்தில் இப்பகுதியை ஆய்வுக்குட்படுத்திய உள்ளூர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மார்ட்டின் ஸ்டேபிள்ஸால் குகைக்குள் மனிதரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பின்னர் மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் (UCLan) தலைமையிலான சர்வதேச குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த எச்சங்களை ஆய்வு செய்த வேளையில் அது 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதருடையது என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், அந்நபருடைய சடலம் புதைக்கப்படும்போது அதனுடன் அரிய பொருட்களும் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

Scientists discover the remains of a man in a cave in Cumbria

image Credit : University of Central Lancashire

இதுகுறித்து பேசிய மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி பிரிவின் நிபுணர் டாக்டர். பீட்டர்சன்,"மார்ட்டினின் நம்பமுடியாத கண்டுபிடிப்பு சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த பனி யுகத்தின் முடிவிற்குப் பிறகு பிரிட்டனில் மனித நடவடிக்கைக்கான ஆரம்ப காலங்கள் இவை என்பதால் இது மிகவும் முக்கியமானது" என்றார்.

Scientists discover the remains of a man in a cave in Cumbria

image Credit : University of Central Lancashire

ஆராய்ச்சியாளர்கள் ரேடியோ கார்பன் டேட்டிங் முறையைப் பயன்படுத்தி இந்த எச்சங்களின் வயதை கண்டுபிடித்திருக்கின்றனர். பனியுகம் முடிவந்த பிறகு அதாவது சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முக்கியமான சான்று இது என்பதால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இது குறித்த ஆராய்ச்சி பற்றி பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

Also Read | உலகின் அழிவை கணிக்கும் Doomsday clock.. இன்னும் 90 செகண்டுகள் தான்.. பகீர் கிளப்பிய ஆராய்ச்சியாளர்கள்..!

SCIENTISTS, DISCOVER, CAVE, CUMBRIA

மற்ற செய்திகள்