'மொத்தம் 25 சிட்டியில...' '130 பேர வச்சு டெஸ்ட் பண்ணியிருக்கோம்...' 'கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவு குறித்து...' - WHO-ன் தலைமை விஞ்ஞானி அளித்த தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறந்த செயல்திறனை 3-ஆம் கட்ட பரிசோதனையில் நிருபித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. ஆய்வின் முடிவில் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான 77.8% செயல்திறன் இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.
அதேப்போன்று டெல்டா வேரியன்ட் வைரஸுக்கு எதிராக 65.2 சதவிகிதம் செயல்திறன் இருப்பதாகவும், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுக்கு எதிராக 93.4 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. இந்தியா முழுவதும் 25 நகரங்களில், 130 கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வெளிவந்துள்ளது. கோவாக்சின் 2-ம் தவணை செலுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்தே இந்த முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறந்த செயல்திறனை மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிருபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் 60 முதல் 70 சதவீத மக்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டிற்காக கோவாக்சின் தடுப்பூசி காத்திருப்பு பட்டியலில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவாக்சின் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது.
பாரத் பயோடக் நிறுவனமானது ஐசிஎம்ஆர் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்த தடுப்பூசி கோவாக்சின் ஆகும்.
மற்ற செய்திகள்