'குட்டை பாவாடை' அணிந்து பாடம் நடத்தும் 'ஆண்' ஆசிரியர்கள்...! என்ன காரணம்...? - உலக அளவில் 'டிரெண்டிங்' ஆன ஹேஷ்டேக்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாலின பாகுபாடை எதிர்க்கும் வகையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாவாடை அணிந்து பள்ளிக்கு வந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'குட்டை பாவாடை' அணிந்து பாடம் நடத்தும் 'ஆண்' ஆசிரியர்கள்...! என்ன காரணம்...? - உலக அளவில் 'டிரெண்டிங்' ஆன ஹேஷ்டேக்...!

ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே பாலின பாகுபாடு இருக்கக்கூடாது என வெலோடோலிட் நகரில் உள்ள பள்ளியில் படித்த 15 வயது மிக்கேல் கோம்ஸ் சிறுவன் கடந்த நவம்பர் குட்டை பாவாடை அணிந்து பள்ளிக்கு சென்றான்.

ஆனால், பள்ளி நிர்வாகமோ அந்த சிறுவனின் மனநிலை குறித்து, மனநல மருத்துவருடன் ஆலோசிக்க வைத்ததுடன் பள்ளியிலிருந்தும் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் மிக்கேல் கோம்ஸ் அவருக்கு நடந்த சம்பவம் குறித்து டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறுவனின் இந்த வீடியோ வைரலாகி பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிறுவன் படித்த பள்ளியின் ஆசிரியர்களும், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களுமே அச்சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்தும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த பள்ளி ஆசிரியரே, சிறுவனுக்கு சப்போர்ட் பண்ணும் வகையில் குட்டை பாவாடை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் #ClothesHaveNoGender என்ற ஹேஷ் டேக்கும் உலக அளவில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.

மற்ற செய்திகள்