“ரத்தத்துலயே ஊறிப்போனதா?”.. பள்ளிச் சிறுவர், சிறுமியர் செய்த காரியம்!. 3 கறுப்பின இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிறந்தநாள் விழா ஒன்றில் பொம்மை வேடமிட்டு குழந்தைகளை மகிழ்விக்க வந்த கறுப்பினப் பெண்கள் 3 பேரை ஆரம்பப் பள்ளி மாணவர்கள் இனரீதியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பெட்போர்ட்ஷையரில் நடக்கவிருந்த 4 வயது சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் விழாவில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை வேடமாக தரித்து, குழந்தைகளை மகிழ்விப்பதற்காக Ebonnie Gooding, அவரது அக்கா Tamara மற்றும் உறவினர் Rosie Trumpet ஆகிய மூன்று பெண்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
விழாவிற்கு வந்த இவர்களை ஆரம்பப் பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமியர் அடித்தும் காலால் மிதித்தும் இருக்கிறார்கள். எனினும் அவர்களை அமைதிப்படுத்துவதற்காக அழுவது போல் அந்தப் பெண்கள் நடித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சிறுவர் சிறுமியர் தாக்கியுள்ளனர். இந்த குழந்தைகள், அந்த இளம் பெண்களைத் தாக்கும் போது குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை கட்டுப்படுத்த வில்லை என்றும், இந்த பெண்களை அந்த சிறு பிள்ளைகள் தாக்கும்பொழுது இன ரீதியாக விமர்சித்துக் கொண்டே தாக்கியதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து இனி இங்கு இருக்க கூடாது என்று எண்ணி, அந்த இளம் பெண்கள் வீடு திரும்ப முயற்சித்தபோது கதவுகளை அடைத்த சிறுவர்களின் பெற்றோர்கள், “போவதாக இருந்தால் கொடுத்த முன்பணத்தை திருப்பி கொடுக்குமாறு” அந்தப் பெண்களை வற்புறுத்தி உள்ளனர். இறுதியாக 8 போலீசார் வந்து இந்த பெண்களை மீட்டுள்ளனர். குழந்தைகளின் மனதில் இத்தகைய இனவெறியை விதைத்தது யார்? இதற்கெல்லாம் யார் காரணம்? என்கிற கேள்விகள் ஒருபுறமும், குழந்தைகளின் இனவெறித் தாக்குதல் குறித்த அச்சம் ஒருபுறமும் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்