உலகின் 'நம்பர் 1' பணக்காரரின் மொபைலை ஹேக் செய்து... 'அந்தரங்க' புகைப்படங்களை... மனைவிக்கு அனுப்பிய இளவரசர்?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமேசான் நிறுவனத்தின் அதிபருமான ஜெப் பெஸோஸின் மொபைலை சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஹேக் செய்த விவரம் தற்போது வெளியாகி, உலக அரங்கை அதிர வைத்துள்ளது.
அமேசான் மட்டுமின்றி வேறு சில நிறுவனங்களுக்கும் ஜெப் பெஸோஸ் ஓனராக இருக்கிறார். அவற்றுள் முதன்மையானது வாஷிங்டன் போஸ்ட். சில ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தை வாங்கிய ஜெப் உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் குறித்து நேர்மையான கட்டுரைகள் வாஷிங்டன் போஸ்டில் வெளியாவதை ஆதரிக்கிறார்.
இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் அவர்மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி தொடர்ந்து முஹம்மது பின் சல்மான் குறித்த கட்டுரைகளை தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டில் வெளியிட்டு வந்தார். இதை தடுக்க முயன்ற சல்மான் அதில் தோல்வியடைந்தார். அதனால் தான் கசோகியை அவர் தீர்த்துக் கட்டியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னரும் கோபம் தீராத இளவரசர் ஜெப்பின் வாட்ஸ் ஆப்பை ஹேக் செய்துள்ளார். உச்சகட்டமாக ஜெப் பெஸோஸின் மனைவி அவரை விவாகரத்து செய்ததற்கும் சல்மான் தான் காரணமாம். ஜெப்பின் மொபைலை ஹேக் செய்தவர் அதில் இருந்த சில அந்தரங்க புகைப்படங்களை அவரது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின்னர் தான் அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அவரது மனைவிக்கு நஷ்டஈடு அளித்த வகையில் சில சொத்துக்கள் கையை விட்டு போனதால், உலகின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை ஜெப் இழக்கவும் நேரிட்டது. 25 வருட தாம்பத்திய வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது சல்மான் தான் என்று செய்திகள் வெளியானாலும், இதில் உண்மையில்லை என்று சவுதி தூதரகம் செய்தி வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புகைப்படங்கள் எப்படி கசிந்தது? என்பதை துப்பறியும் நிபுணர் ஒருவரைக்கொண்டு ஜெப் விசாரித்து இருக்கிறார். அப்போது தான் சல்மானின் நேரடி மேற்பார்வையில் சவுதி அரசு இந்த செயலை செய்த விவகாரம் தெரிய வந்துள்ளது. ஜெப் பெஸோஸ் போனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு வைரஸ் மெசேஜ் அனுப்பி, அதில் இருந்த புகைப்படங்களை சல்மான் நேரடியாக திருடி உள்ளார். பின் இதை வேறு சில நபர்கள் வைத்து ஜெப் பெஸோஸ் மனைவிக்கு அனுப்பி அவரை விவாகரத்துக்கு தூண்டியுள்ளனர்.
ஜெப் பெஸோஸ் இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும், உலகின் நம்பர் 1 பணக்காரரின் மொபைலையே ஹேக் செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.