2,000 வருஷம் முன்னாடி வாழ்ந்த பொண்ணு முகம் இப்டி தான் இருந்துச்சா?".. உலகையே திரும்பி வைக்க பார்க்க வெச்ச ஆய்வு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழமையான பெண் ஒருவரின் முகத்தை முழுமையாக தற்போது மறு வடிவமைப்பு செய்துள்ள விஷயம், பெரிய அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

2,000 வருஷம் முன்னாடி வாழ்ந்த பொண்ணு முகம் இப்டி தான் இருந்துச்சா?".. உலகையே திரும்பி வைக்க பார்க்க வெச்ச ஆய்வு!

                                                                                                  Images are subject to © copyright to their respective owners

பல்வேறு பழங்கால விஷயங்கள் குறித்தும் அப்போது வாழ்ந்த மனிதர்கள் குறித்தும் ஏராளமான ஆராய்ச்சிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்தி வருகின்றனர். உலக அளவில் பல இடங்களில் ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் சூழலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் குறித்தும், அவர்கள் வாழ்ந்த இடங்கள் குறித்தும் பல்வேறு அதிசயமான தகவல்கள் கூட அவ்வப்போது வெளியாகும்.

அந்த வகையில் தான் தற்போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண் பற்றி அறிந்து அவரது முகத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஹெக்ரா என்னும் நகரில் இருந்து ஒரு சில மாதங்களுக்கு முன்னர் 69 மம்மிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருந்தனர். அதில் இருந்த ஒரு பெண்ணின் பெயர் ஹினாட் என்பதும், கிமு முதல் நூற்றாண்டில் வாழ்ந்து இறந்த ஒரு முக்கிய நபராகவும் அவர் கருதப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், கிடைத்த உடல் எச்சங்களும் அழியாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அக்காலத்தில் எப்படி அவர்கள் இருந்தார்கள் என்பதை அறியவும் ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Saudi Arabia unveils nabataean woman lived before 2000 years

Images are subject to © copyright to their respective owners

2000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அரேபியா மற்றும் லெவன்ட் பகுதியில் வாழ்ந்த பழங்கால அரபு நாகரீகம் தான் நபடேயன்கள். முன்பு அப்பகுதியை ஆண்டு வந்த இவர்கள் குறித்த ஆய்வில், பெண்ணின் முகத்தை மீட்டுருவாக்கம் செய்யவும் முயன்றுள்ளனர்.

அதன்படி, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு நிலையம் ஒன்று AlUla ராயல் கமிஷன் நிதியுதவியுடன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளார்கள். முன்னதாக நபடேயன்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்களும் அவர்களது ஆட்சி முறையும் பெரிய அளவில் கம்பீரமாக நின்ற சூழலில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாமல் இருந்து வந்தது.

Saudi Arabia unveils nabataean woman lived before 2000 years

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில் நபடேயன்கள் நாகரீக பெண்ணின் முகத்தை பல மாத முயற்சிக்கு பின்னர் தற்போது மீட்டுருவாக்கம் செய்து அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் முகத்தை மருவடிவமைப்பு செய்த விஷயம், உலகளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

SAUDI ARABIA, RESEARCH, NABATAEAN

மற்ற செய்திகள்