'சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை...' 'எங்க மக்களை வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம்...' - துணிந்து அறிவித்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனா தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியை சவூதி அரேபியா தங்கள் நாட்டு மக்களுக்கு பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

'சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை...' 'எங்க மக்களை வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம்...' - துணிந்து அறிவித்த நாடு...!

சீனாவில் தொடங்கி தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு அந்நாட்டு கேன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுப்பிடித்துள்ளது. தற்போது வரை பரிசோதனை நிலையில் இருக்கும் இந்த மருந்தை சவூதி அரேபியா தங்கள் நாட்டில் உள்ள  5,000 தன்னார்வலர்கள் மீது பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனா பல்லுருவாக்கம் அடைவதை தடுப்பதாகவும் நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது சவூதி அரேபியாவில் இந்த சோதனை ரியாத், மக்கா மற்றும் தம்மம் ஆகிய இடங்களில் நடத்தப்பட போவதாக என்று சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது சவுதியில் கொரோனா பரவும் வீதம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்