ஐயோ, அது வதந்தி எல்லாம் இல்லங்க.. சாட்டிலைட் புகைப்படத்தில் தெரிய வந்துள்ள உண்மை..
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா: சீனாவில் புத்தர் சிலை இடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த சாட்டிலைட் போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருக்கும் திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் டிராகோ பகுதியில் அமைந்திருக்கும் சுமார் 99 அடி புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. இந்த பகுதியை சுற்றிலும் பெரும்பாலும் திபெத்தியர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த சிலை தத்ரூபமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிலை ஆகும்.
நம்பிக்கைகளும், வியப்பும்:
இந்த சிலை குறித்த ஏராளமான வியக்க வைக்கும் தகவல்களும், நம்பிக்கைகளும் புத்த மதத்தை பின்தொடர்பவர்களிடம் உண்டு. இந்த சிலையை காண விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் வந்து குவிவர். உள்ளூர் மக்கள் அல்லாமல் வெளிநாட்டு மக்களும் இந்த சிலையை காண வருவதும் உண்டு.
புத்தர் சிலையை இடித்ததாக தகவல்:
இந்நிலையில் உலகின் வல்லரசு நாடான சீனா அந்த 99 அடி உயர புத்தர் சிலையை இடித்துத் தள்ளியுள்ளதாக செய்தி வெளியாகியது. அதுமட்டுமில்லாமல் இந்த புத்தர் சிலை இடித்து ஒன்பது நாட்கள் ஆகிறது எனவும், சில மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு இடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியுலகத்திற்கு தெரியாமல் சீனா:
ஆனால், சீன அரசு இதனை வெளியுலகத்திற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சிலர் இதனை வதந்தி என கூறினாலும், புத்தர் சிலை தகர்க்கப்பட்டதை செயற்கைக்கோள் புகைப்படங்களும் உறுதி செய்துள்ளன.
சிலை உயரமாக கட்டப்பட்டதாக புகார்:
சீனாவில் இந்த புத்தர் சிலை இடிப்பிற்கு காரணமாக, 'சிலை உயரமாக கட்டப்பட்டதாக புகார் எழுந்ததால் இடிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்படுகிறது. இந்த சிலையை ஏராளமான மக்கள் பார்க்க வந்து குவியும் ஒரு இடம் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் சர்ச்சை:
புத்தர் சிலை இடிப்பின் போது சீன அதிகாரிகள் தோசம் காட்செல் மடாலயத்தில் உள்ள துறவிகளையும், சுவார் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் திபெத்தியர்களையும் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்திய எல்லைகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு:
சீனா ஏற்கனவே இந்தியாவில் எல்லைப்பகுதி மாநிலங்களான அருணாச்சலப் பிரதேஷம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பது, அங்கு புகுந்து கிராமங்களை உருவாக்கி கொடியை நாட்டுவதும் அடிக்கடி நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராமங்களுக்கு சீன பெயரில் பெயர்களை வைத்து ஆக்கிரமிப்பு நடத்தி வருகிறது.
இந்த தகவலும் அண்மையில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து சிலையை இடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்