தலைவர் பொறுப்பை ஏற்கவிருந்த நிலையில் ‘சாம்சங்’ துணைத்தலைவர் ‘அதிரடி’ கைது!.. 2 ஆண்டுகள் சிறை தண்டனை!
முகப்பு > செய்திகள் > உலகம்சாம்சங் துணைத் தலைவர் ஜேய் ஒய் லீ (Lee Jae-yong) தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹைக்கு லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் கடந்த 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இத்துடன் 5 ஆண்டு சிறை தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தனக்கு விதிக்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்தார். அதனால் இவருடைய தண்டனை ரத்து செய்யப்பட்டது. எனினும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. அந்த சியோல் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தற்போது பரபரப்பு தீர்ப்பினை அளித்தது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குக் குறைவாக விதிக்கப்பட்ட சிறை தண்டனைகள் மட்டுமே ரத்து செய்யப்படுவதற்கும் குறைக் கப்படுவதற்குமானது என்றும் தண்டனைக் காலம் 3 ஆண்டுகளுக்கும் அல்லது அதற்கும் மேலாக இருந்தால் அந்த தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தென் கொரிய சட்ட விதிமுறை.
இதனால் சாம்சங் துணைத் தலைவர் லீக்கு திரும்பவும் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் ஓராண்டு சிறை தண்டனையில் இருந்ததால் தற்போது 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் தான் நிறுவனத் தலைவரும் லீயின் தந்தையுமான லீ குன் ஹீ (Lee Kun-hee) காலமானார்.
அவருடைய பொறுப்புகளை Lee Jae-yong கைப்பற்றவிருந்த நிலையில் தற்போது அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மற்ற செய்திகள்