'ஒரு அடி நகர முடியாது...' ப்ளீஸ்... அவங்கள விட்ருங்க...! 'அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...' - எவர்கிரீன் கப்பலில் இன்னும் முடியாத பிரச்சனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த மார்ச் 23ஆம் தேதி எகிப்தில் உள்ள உலகின் மிக முக்கியமன நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாயில் பயணம் செய்த, ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எவர்கிரீன் என்னும் சரக்கு கப்பல் கால்வாயின் குறுக்கே தரைதட்டியது.
அதன் பிறகு, அந்த வழியாக பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல முடியாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருந்தன. ஒரு வாரத்திற்கும் மேல் பல கட்டங்களாக மீட்பு பணி நடைபெற்ற பிறகே 'எவர் கிரீன்' கப்பல் மீட்கப்பட்டது.
இதனால் பல்வேறு நாடுகளில் பொருளாதார சந்தை வர்த்தகம் ஒரு சிறிய சறுக்களை சந்தித்தது எனலாம். இதன் காரணமாக சூயஸ் காலைவாயை நிர்வாகித்து வரும் 'சூயஸ் கால்வாய் ஆணையம்' வழக்கு தொடர்ந்தது.
அதாவது இந்த பாதையை உலக நாடுகளின் கப்பல்கள் பயன்படுத்துவதில் தினமும் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. ஆனால் எவர் கிரீன் கப்பல் தரைதட்டியதால் அதை மீட்பதற்காக ஏற்பட்ட செலவு, கால்வாயில் ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்டஈடு, நீர்வழிப் போக்குவரத்து தடைபட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கும்படி சூயஸ் நிர்வாகம் கேட்டது.
ஆனால் எவர்கிரீன் கப்பலின் உரிமையாளரான ஷோய் கிசென் கைஷா நிறுவனம், அவ்வளவு பெரிய தொகை வழங்க முடியாது என தெரிவித்தது.
இவ்வளவு சம்பவம் நடந்த போதும் கப்பலை இயக்கிய மாலுமிகள், ஊழியர்கள் என மொத்தம் 26 பேர் குறித்து யாரும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. அதோடு தற்போது எவர் கிரீன் கப்பலில் சிக்கியுள்ள அனைவருமே இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எவர்கிரீன் கப்பல் உரிமையாளர் மற்றும் சூயஸ் கால்வாய் ஆணையதிற்கு இடையே நடக்கும் இந்த சட்ட மோதலால், ஒரு மாதத்துக்கும் மேலாக ஊழியர்கள் எல்லாரும் கப்பலிலேயே முடங்கி கிடக்கின்றனர். இவர்கள் கப்பலை விட்டு வெளியே வருவதற்கு சூயஸ் கால்வாய் ஆணையம் அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து இந்திய கடல் தொழில் சங்கத்தின் தலைவர் அப்துல்கானி செராங் பேசுகையில், 'கப்பலில் இருப்பவர்கள் அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்கள். அவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை விடுவிக்க வேண்டும். நஷ்டஈடு பிரச்சனை முடியும் வரையில் அவர்களை கப்பலில் வைத்திருப்பது இயலாத காரியம்' எனவும் கூறியுள்ளார்.
மேலும் கப்பலில் சிக்கியுள்ள ஊழியர்களை காப்பாற்றுமாறு அவர்களின் குடும்பத்தார் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்