Tea போடுறதுல கின்னஸ் ரெக்கார்டா..? அதிர்ந்து போன அதிகாரிகள்.. அப்படி என்னப்பா செஞ்சாங்க.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒருமணி நேரத்தில அதிக கப்களில் தேநீர் போட்டு உலக சாதனை படைத்திருக்கிறார் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.

Tea போடுறதுல கின்னஸ் ரெக்கார்டா..? அதிர்ந்து போன அதிகாரிகள்.. அப்படி என்னப்பா செஞ்சாங்க.?

Also Read | Bigg Boss 6 Tamil : "எதே மறுபடியுமா?".. அமுதவாணன் சொல்லிய விஷயம்.. அரண்ட GP முத்து..

தென் ஆப்பிரிக்க நாடை சேர்ந்தவர் இங்கர் வாலண்டைன் (Ingar Valentyn). இவர் அந்த பகுதியில் விளையும் மூலிகை செடியான aspalathus linearis shrub-ன் இலைகளை கொண்டு தேநீரை செய்திருக்கிறார். அதுவும் ஒரு மணி நேரத்தில் 249 கப்களில். aspalathus linearis shrub இந்த செடி தென் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளர்கிறது. இவற்றின் இலைகளை கொண்டு உருவாக்கப்படும் தேநீர் இயல்பிலேயே சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இந்த சிவப்பு நிற தேநீருக்கு ரூயிபோஸ் என்று அப்பகுதியில் பெயரும் இருக்கிறது.

South African Woman Makes 249 Cups of Tea In 1 Hour To Set World Recor

இங்கரின் இந்த உலக சாதனை முயற்சியினை பார்வையிட உள்ளூர் பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் வந்திருக்கின்றனர். இதற்காக சிறப்பு திட்டம் ஒன்றும் இங்கரிடம் இருந்திருக்கிறது. அதாவது தேநீர் தயாரிக்கும் குடுவையில் 4 Tea Bag-களை முதலில் நிரப்பியிருக்கிறார் இங்கர். இதன்மூலம் 4 கப்களை நிரப்பலாம். அதேவேளையில் பக்காவான ரூயிபோஸ் தேநீர் தயாரிக்க, Tea Bag-கள் குறைந்தது 2 நிமிடங்களாவது ஊற வேண்டும். அதன் பின்னர் தயாரான தேநீரை 3 கப்களில் நிரப்பியிருக்கிறார் அவர். அதனை தொடர்ந்து Tea Bag-களை கோப்பையில் சேர்த்துக்கொண்டே சென்றிருக்கிறார்.

ரூயிபோஸ் ஒரிஜினல், வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெரி எனும் 3 வகைகளில் தேநீரை தயாரித்திருக்கிறார் இங்கர். முதலில் 170 கப்களில் தேநீர் தயாரிக்கலாம் என இங்கர் நினைத்திருக்கிறார். ஆனால், ஒருமணி நேர முடிவில் அவர் 249 கப்களை தேநீரால் நிரப்பியிருக்கிறார். இதன் மூலம், ஒரு மணி நேரத்தில் அதிக கப்களில் தேநீர் போட்டதற்காக அவருக்கு கின்னஸ் அமைப்பு சான்றிதழ் அளித்து கவுரவப்படுத்தியுள்ளது.

South African Woman Makes 249 Cups of Tea In 1 Hour To Set World Recor

இந்த சாதனைக்கு பின்னால் ஒரு சோகக்கதையும் இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி இங்கரின் சொந்த ஊரான Wupperthal-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மலைவாழ் பிரதேசமான இதில் வசித்துவந்த சுமார் 200 குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்தனர். இதில் இங்கரின் குடும்பமும் ஒன்று. இதனால் தான் வேலைபார்த்துவந்த சுற்றுலா அலுவலகத்தில் வசிக்க துவங்கிய இங்கர், உலக மக்களின் கவனத்தை ஈரப்பதன் மூலம், Wupperthal-ன் சுற்றுலா துறையை மேம்படுத்த நினைத்திருக்கிறார். அதன் பலனாக இந்த முயற்சியில் இறங்கி அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Also Read | கதை சொல்லும் Task-ஐ நெனச்சு கண்கலங்கிய ஜனனி.. தன்னோட ஸ்டைலில் கலகலப்பூட்டிய GP முத்து..!

Also Read | "நீங்க சிரிப்பீங்கன்னு தெரியும்.. ஆனா".. குடும்பத்தினரிடம் ஜாலியாக பேசிய GP முத்து.. கடைசில சொன்னதுதான் செம்ம..!

SOUTH AFRICAN, WOMAN, TEA, WORLD RECORD

மற்ற செய்திகள்