உலகமே 'ஓமிக்ரான' நினைச்சு 'ஃபீல்' பண்ணிட்டு இருந்தப்போ... 'மனசு குளிருற மாதிரி வந்துள்ள கிரேட் நியூஸ்...' - தென் ஆப்பிரிக்க மருத்துவர் சொன்ன தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவின் திரிபு வைரசான ஒமைக்ரான் வைரஸ் முன்பு பரவிய டெல்டா வைரசுடன் தென் ஆப்பிரிக்க பெண் மருத்துவர் ஒருவர் ஒப்பிட்டு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரஸாக மாரியத்தை முதன் முதலில் கண்டுபிடித்து தென் ஆப்பிரிக்க நாட்டு அரசுக்கு எச்சரித்து சோதனைக்கு வழிவகுத்த தென் ஆப்பிரிக்க பெண் மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸீ.
இவர் தற்போது ஒமைக்ரான் வைரஸ் குறித்தும் அதன் தன்மை குறித்தும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் 'ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் போல சளி தொந்தரவு, உடல், தசை வலி, மிதமானது முதல் தீவிரமான தலைவலி போன்றவை இருக்கும்.
முன்பு கொரோனா பரவிய போது மக்களுக்கு ஏற்பட்ட வாசனை, சுவையில் குறைபாடு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் என எதுவும் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படவில்லை.
இதன் மூலம் நாம் இந்த ஒமைக்ரான் வைரஸை டெல்டாவை விட மிகவும் லேசானது என கூறுகிறோம். அதேபோல் உயிரிழப்புகளைப் பொருத்தவரையில் டெல்டாவை விட குறைவாகவும், ஆனால் பரவும் தன்மையில் அதைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால், தடுப்பூசி செலுத்தாத இளைஞர்கள் தான் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
#WATCH | South African Medical Association Chairperson Dr Angelique Coetzee, the first to detect the new COVID-19 variant #Omicron, enlisting symptoms & guidelines pic.twitter.com/WgOprbZm3x
— ANI (@ANI) December 3, 2021
உலகமே ஒமைக்ரான் குறித்து அச்சத்தில் இருக்கும் போது தென் ஆப்பிரிக்க பெண் மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸீயின் இந்தப் பேட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்