‘அதிவேகத்தில்’ வந்த பேருந்தால்... நேருக்கு நேர் ‘மோதி’ ஏற்பட்ட கோரம்... ‘3 குழந்தைகள்’ உட்பட ‘10 பேருக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’...
முகப்பு > செய்திகள் > உலகம்தென் ஆப்பிரிக்காவில் இன்று நடந்த சாலை விபத்து ஒன்றில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று அதிவேகமாக சென்ற மினி பேருந்தும், இலகு ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எல்டோரடோ பார்க் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்து, அதில் பயணித்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். மேலும் சிலர் விபத்தின்போது வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.