'சட்டத்திற்கு புறம்பானது' ரஷ்யாவின் முதன்மை மருத்துவர் ராஜினாமா... வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் முதல் தடுப்பூசியை கண்டறிந்து விட்டதாக ரஷ்யா பெருமையுடன் அறிவித்துள்ளது. ஆனால் மனித பரிசோதனைகளை முழுவதுமாக முடிக்கவில்லை என உலக நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன. ரஷ்யாவின் இந்த அவசரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவிக்க, விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

'சட்டத்திற்கு புறம்பானது' ரஷ்யாவின் முதன்மை மருத்துவர் ராஜினாமா... வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

இந்த நிலையில் ரஷ்யாவின் முதன்மை மருத்துவரான அலெக்ஸாண்டர் சுச்சாலின் தன்னுடைய பதவியை  செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மருந்தை இப்போது பதிவு செய்யக்கூடாது என அலெக்ஸாண்டர் தடுத்ததாகவும் அதனையும் மீறி மருந்து பதிவு செய்யப்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், '' தடுப்பூசியை பதிவு செய்வதற்கு முன் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி இதை தடுக்க முயன்றேன். ஆனால் என்னால் முடியாமல் போய்விட்டது. மருத்துவ விதிமுறைகள் அனைத்தும் இந்த விஷயத்தில் மீறப்பட்டுள்ளது. இதையும் தாண்டி பல விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிடுவது என்னை சோர்வடைய செய்து விட்டது,'' என வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

மனித பரிசோதனைகள் முடிவு அடையாமல் ரஷ்யா அவசர கதியில் தடுப்பூசி தயாரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது முதன்மை மருத்துவரின் பேட்டி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இதனால் வரும் நாட்களில் ரஷ்யாவின் தடுப்பூசிக்கு சர்வதேச அரங்கில் போதிய வரவேற்பு இல்லாமல் போகலாம் என கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்