VIDEO: 'பென்ஸ் கார் மேல அப்படி என்ன கோவம்...' 'காரை கொளுத்திட்டு ஜாலியா உட்கார்ந்து சாப்ட்றார்...' 'பேக்ரவுண்ட்ல மியூசிக் வேற...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்ய யூடியூபர் ஒருவர் தன் 2.42 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை தீயிட்டு கொளுத்திய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

VIDEO: 'பென்ஸ் கார் மேல அப்படி என்ன கோவம்...' 'காரை கொளுத்திட்டு ஜாலியா உட்கார்ந்து சாப்ட்றார்...' 'பேக்ரவுண்ட்ல மியூசிக் வேற...' - வைரல் வீடியோ...!

ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் லிட்வின் என்ற யூடியூபர் ஒருவர் தன் யூடியூப்பில் சுமார் 4.95 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்துள்ளார். அதில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அவரின் பாலோவேர்ஸ்ஸை    அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில் தன்னுடைய புதிய மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றை அவர் தீயிட்டு கொளுத்தியுள்ளார். அதன் மதிப்பு சுமார் ரூ. 2.42 கோடி எனக் கூறப்படுகிறது.

தன்னுடைய காரை கொளுத்தியதற்கான காரணத்தையும் மிகைல் லிட்வின் கூறியுள்ளார். அதாவது, ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் உடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

கார் வாங்கிய புதிதில் அதில் சில கோளாறுகள் இருப்பதால் சரிசெய்வதற்காக டீலரிடம் 5 முறை அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, வேலையை முடிக்காமல் அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.

இதனால் தான் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க நினைத்த அவர், இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். அவர் வெளியிட்ட வீடியோ சில மணி நேரங்களில் ஏராளமான வியூஸை குவித்துள்ளது.

மற்ற செய்திகள்