கொரோனா 'தடுப்பூசி' குறித்து 'ரஷ்ய' அதிபரின் லேட்டஸ்ட் 'தகவல்',,.. இந்தியாவுக்கு அடித்த 'ஜாக்பாட்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த கொடிய வைரஸை கட்டுபப்டுத்த வேண்டி பல உலக நாடுகள் தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

கொரோனா 'தடுப்பூசி' குறித்து 'ரஷ்ய' அதிபரின் லேட்டஸ்ட் 'தகவல்',,.. இந்தியாவுக்கு அடித்த 'ஜாக்பாட்'!!!

இந்நிலையில், 12 ஆம் பிரிக்ஸ் மாநாடு, காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ, தென்னாபிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்புக் கொண்டபடி பிரிக்ஸ் தடுப்பூசிகளுக்கான ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஸ்புட்னிக் V தடுப்பூசி ஆகஸ்ட் மாதமே பதிவு செய்யப்பட்டு விட்டது.

தடுப்பூசியை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் உற்பத்தி செய்ய முடியும். ஸ்புட்னிக் V தடுப்பூசியை சோதனை செய்ய பிரேசில் மற்றும் இந்தியாவுடன் ரஷ்ய நேரடி முதலீட்டு அமைப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதே போல தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்திய, சீன நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட நாடுகள் தவிர உலகின் மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன' என புதின் தெரிவித்தார். ஸ்புட்னிக் V தடுப்பூசி, கொரோனாவை தடுப்பதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்