அந்த ‘ஆப்’ தாங்க என் உயிர்.. திடீர்னு இப்படி பண்ணிட்டாங்க.. கதறி அழுத ரஷ்ய செலிபிரிட்டி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் செயலி தடை செய்யப்பட்டதால் இளம்பெண் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரேன் மீது 2 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய அதிபர் புதின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவுகள் வெளிவந்தன. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரஷ்ய அரச தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிக்கு ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து கூறிய இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மோசேரி, ‘திங்கள் முதல் ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் செயல்படாது. இந்த செயலியை 8 கோடி பேர் ரஷ்யாவில் பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கு வெளியேயும் அந்த நாட்டை சேர்ந்த பலரும் பயன்படுத்துகின்றனர். ரஷ்ய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தடை குறித்து ரஷ்ய இன்ஸ்டா செலிபிரிட்டியான இளம்பெண் ஒருவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார் அதில், ‘இன்ஸ்டாகிராமில் நான் செலிபிரிட்டியாக இருப்பதால் எனக்கு வருமானம் கிடைக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கு இன்ஸ்டா தான் உயிர், எனது வாழ்க்கை. என் ஒவ்வொரு நாளும் அதோடு தான் தொடங்கும், அதனோடு தான் முடியும்’ என கண் கலங்க தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்