'டாக்டர், எனக்கு இந்த 'ஷேப்' புடிக்கல'... 'இளம்பெண்ணின் விபரீத ஆசை'... 'ஆபரேஷன் தியேட்டர் போனதும் மருத்துவருக்கு எடுத்த உதறல்'... மொத்தமும் தலைகீழாக மாறிப்போன அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளம்பெண் இன்ஸ்டாகிராமில் பொருட்களை பிராண்ட் செய்யும் INFLUENCER பணியைச் செய்து வந்துள்ளார். இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

'டாக்டர், எனக்கு இந்த 'ஷேப்' புடிக்கல'... 'இளம்பெண்ணின் விபரீத ஆசை'... 'ஆபரேஷன் தியேட்டர் போனதும் மருத்துவருக்கு எடுத்த உதறல்'... மொத்தமும் தலைகீழாக மாறிப்போன அதிர்ச்சி!

ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் மெரினா லெபடேவா. இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். இவரைப் பின்தொடர்பவர்கள் அதிகம் என்பதால், இவர் பலவகையான பொருட்களுக்கு பிராண்ட் செய்யும் பணியைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் மிகவும் பிசியாக இருக்கும் மெரினா, தனது அழகு குறித்து மிகவும் கான்ஷியஸாக இருந்து வந்துள்ளார். இதனால் தனது மூக்கு பகுதி சரி இல்லையோ என்ற எண்ணம் அவருக்கு அவ்வப்போது இருந்து வந்துள்ளது. அதனைச் சரி செய்தால் என்ன, என முடிவு செய்து மருத்துவர் ஒருவரை அணுகியுள்ளார்.

Russian Influencer Marina Lebedeva Nose Job Procedure Goes Wrong

அந்த வகையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.  Rhinoplasty என அழைக்கப்படும் இந்த அறுவை சிகிச்சைக்குக் கட்டணமாக 4 லட்ச ரூபாயை அந்த மருத்துவர் கேட்டுள்ளார். இதற்கிடையே அறுவை சிகிச்சைக்காக மெரினா ஆபரேஷன் தியேட்டர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் ஆரம்பிக்க இருந்த நிலையில், திடீரென மெரினாவின் உடலில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய இருந்த மருத்துவர் பதறிப் போனார். பின்னர் மெரினாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றும் அது முடியாமல் போனது.

Russian Influencer Marina Lebedeva Nose Job Procedure Goes Wrong

மெரினாவின் மரணம் குறித்து அவரது கணவருக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையின் மருத்துவ அலட்சியத்தைச் சுட்டிக்காட்டிக் குற்ற வழக்குப் பதியப்பட்டுள்ளது. அது நிரூபணமானால் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் ஆறு ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற வேண்டி இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்