'பல மாசமா போராடி கொரோனா-க்கு தடுப்பூசி கண்டு பிடித்த நாடு...' 'ரெஜிஸ்டர் பண்ண போற நேரம் பார்த்து...' - குண்ட தூக்கி போட்ட தொற்றுநோய் நிபுணர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முதலாவது கொரோனா மருந்து நாளை மறுநாள் பதிவு செய்ய தயாராகிய நிலையில், இந்த மருந்து மிகவும் ஆபத்தானது என ரஷ்ய நாட்டின் முன்னாள் தொற்று நோய் பிரிவு தலைவரான அலக்சாண்டர் செபுர்யோவ் கூறியுள்ளார்.
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காலம் முதல், பல உலக நாடுகள் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல மாத முயற்சிகளுக்கு பின், பலகட்ட சோதனைகளையும் கடந்து ரஷ்யா நாங்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளோம் என அறிவித்தது. மேலும் இந்த மருந்தை நாளை மறுநாள் பதிவு செய்ய உள்ளதாக ரஷ்யா கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த தடுப்பு மருந்தை குறித்து ரஷ்ய அரசின் முன்னாள் தொற்று நோய் பிரிவு தலைவரான அலக்சாண்டர் செபுர்யோவ் கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, தற்போது ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, செலுத்தப்படும் மனிதரின் உடலில் இதற்கு முன்பே கொரோனவை எதிர்த்து போராடும் ஆன்டிபாடீஸ் இருந்தால் அவர்களுக்கு இந்த தடுப்பூசியை போட்டால் விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். மேலும் இந்த தடுப்பூசியின் கிளினிகல் முடிவுகள் பற்றிய முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. இந்த தகவல்கள் இல்லாமல் நாம் இதை பயன்படுத்தும் போது கொரோனா தொற்றின் வீரியம் தான் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு பதிலடியாக ரஷ்ய அரசின் காமாலெயா நிறுவனம், தற்போது கண்டுபிடித்திற்கும் இந்த தடுப்பூசியில் செயல்திறன் இல்லாத கொரோனா வைரசின் அம்சங்கள் தடுப்பூசியில் உள்ளதாகவும், அவை தாமாக பல்கி பெருகும் திறன் அற்றவை என்பதால், தடுப்பூசியால் எந்த ஆபத்தும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்