Viruman Mobiile Logo top

தான் வளர்த்த நபர் மீது காதல்.. திருமணம் செய்து 2 ஆண்டுக்கு பிறகு.. வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தான் வளர்த்த நபரையே திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், 2020 ஆம் ஆண்டு வைரலாகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் குறித்த செய்தி ஒன்று வெளி வந்துள்ளது.

தான் வளர்த்த நபர் மீது காதல்.. திருமணம் செய்து 2 ஆண்டுக்கு பிறகு.. வெளியான தகவல்!

Also Read | "இதுக்கு அப்புறமும் பாம்புக்கு கால் இல்லன்னு சொல்லுவீங்க?!" அடடே போட வைத்த கண்டுபிடிப்பு.. மிரள வைத்த 'வாலிபர்'!!

ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா பலம்சேவா. தற்போது இவருக்கு 37 வயதாகும் நிலையில், 2007 ஆம் ஆண்டு, அதாவது மரினாவுக்கு 22 வயது இருக்கும் போது, அலெக்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அலெக்சிக்கு ஏற்கனவே திருமணமாகி ஐந்து மகன்களும் இருந்தனர். அதில் இரண்டாவது மகன் தான் விளாடிமிர் ஷவ்ரின்.

russia woman married her stepson pregnant again

இதனைத் தொடர்ந்து, சுமார் 10 ஆண்டுகள் அலெக்சியுடன் இணைந்து வாழ்ந்த மரினா, அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், தான் வளர்த்த நபரான விளாடிமிர் ஷவ்ரின் மீது மரினாவுக்கு காதல் உருவாகி உள்ளது. இதனை அவரிடம் மரினா வெளிப்படுத்த, அதற்கு ஷவ்ரினும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு, மரினா மற்ற ஷவ்ரின் திருமணம் செய்து கொண்டனர்.

russia woman married her stepson pregnant again

முன்னதாக, அலெக்சியை மரினா திருமணம் செய்த போது, ஷவ்ரினுக்கு 7 வயது இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தான் வளர்த்த நபரையே திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார் மரினா. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது மெரினா - ஷவ்ரின் ஜோடி குறித்து தற்போது மீண்டும் ஒரு தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே முதல் முறை கர்ப்பம் அடைந்த போது, பெரிய அளவில் இணையத்தில் மரினா - ஷவ்ரின் தொடர்பான செய்தி வைரலாகி இருந்தது.

russia woman married her stepson pregnant again

இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மரினா தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு, மரினா -  ஷவ்ரின் பெயர் அதிகம் வைரலாகி வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் தொடர்பான விஷயம், இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | "டெய்லி ரூ.10 லட்சம் வர லாபம் பார்க்கலாம்.." குடும்பமாக போட்ட பகீர் பிளான்.. திடுக்கிட வைக்கும் மோசடி!!

RUSSIA, WOMAN, MARRIED, STEPSON, PREGNANT, திருமணம்

மற்ற செய்திகள்