"உடனே உங்க வீட்டுக்கு மேல எதாவது மார்க் இருக்கானு பாருங்க.. எச்சரிக்கும் உக்ரைன் அரசு..ரஷ்யாவின் மாஸ்டர் பிளானா?
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதை எதிர்த்துவந்த ரஷ்யா, கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதற்கான கோரிக்கையை ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் புதின் சமர்ப்பிக்க, பாராளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது.
குளோப் ஜாமூன் பரோட்டாவா..? என்ன சார் சொல்றீங்க.. வைரலாகும் வினோத டிஷ்..!
இதனை அடுத்து, பெலாரஸ் நாட்டின் எல்லை பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் வீரர்களை உக்ரைனுக்குள் நுழையுமாறு உத்தரவிட்டார் புதின். இதனை தொடர்ந்து உக்ரைனின் விமான நிலையங்கள், கப்பல் படை உள்ளிட்ட உட்கட்டுமானங்களை சிதைக்கும் நோக்கில் ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மார்க்
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் சில வீடுகளின் மீது X, அம்புக்குறி உள்ளிட்ட வினோத குறியீடுகள் இருப்பதாக பேஸ்புக்கில் மக்கள் அச்சம் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் உக்ரைன் அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்த எச்சரிக்கையில்," உங்களது வீட்டின் மேல் தளத்திலோ அல்லது புகை போக்கி குழாயின் மீதோ ஏதேனும் குறியீடுகள் இருந்தால் உடனே அவற்றை அப்புறப்படுத்துங்கள். இல்லையேல் அவற்றின் மீது எதையாவது கொண்டு போர்த்தவும். இந்த குறியீடுகள் ரஷ்ய ராணுவத்திற்கு அளிக்கப்படும் ரகசிய தகவல்களாக இருக்கக்கூடும். இது விமான தாக்குதலுக்கு வழிவகுக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கீவ் நகரத்தில் உள்ள சில வீடுகளில் பிரபதிபலிப்பு மிகுந்த reflective tags பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து மக்கள் தங்களது வீடுகளுக்கு மேலே எந்தவித குறீயீடுகளோ, reflective tags பொருத்தப்பட்டு இருந்தாலோ உடனடியாக சட்ட அமலாக்கத்துறையை தொடர்பு கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார் மேற்கு உக்ரைன் நகரமான ரிவினைன் மேயர் அலெக்ஸ்சாண்டர் ட்ரெடியாக்.
அதேபோல, அருகில் வசிப்பவர்கள் புதிய நபராக இருந்தாலும் அவர்களை கவனிக்கும்படியும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது உக்ரைன் அரசு. ஏற்கனவே கடல், வான் மற்றும் தரை என மும்முனை போரை ரஷ்யா நடத்திவரும் நிலையில் வீடுகளுக்கு மேலே குறியீடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது உக்ரைன் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்