சண்டை ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கு.. சைலண்டா ரஷ்யா போடும் மாஸ்டர் ப்ளான்?.. இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத முடிவை ரஷ்யா எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனிதம் இன்னும் சாகல.. உக்ரைன் மக்கள் செஞ்ச காரியம்.. கண்ணீர் விட்டு அழுத ரஷ்ய வீரர்..!
உக்ரைன் நாட்டின் மீது ஒரு வாரமாக தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டின் பல முக்கிய நகரங்களின் மீது வான்வழி தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. அதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே நடைபெற்ற இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
ரஷ்யா திடீரென உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் அமெரிக்கா பங்கு வகிக்கும் நேட்டோ அமைப்பு உக்ரைன் இணைய விருப்பம் காட்டியது. இதுவே ரஷ்யாவின் கோபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடுகளாக ரஷ்யாவும், உக்ரைனும் உள்ளன. நீண்ட ஆண்டுகளாக ரஷ்யாவுக்கு கட்டுப்பட்டு நடக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகவே உக்ரைன் இருந்தது.
இந்த சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் தேசிய இன எழுச்சி ஏற்பட்டது. அதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அப்போது ரஷ்யா ஆதரவாளராக கருதப்பட்ட முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் (Viktor Yanukovych) பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் ரஷ்யாவிற்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜெலன்ஸ்கி (Zelenskyy) உக்ரைன் அதிபராக பதவியேற்றார். இவர் ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து உக்ரைனை விடுவிக்க முனைப்பு காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க முயன்றார். இதனை தடுக்கவே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போதைய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சை புதிய அதிபராக நியமிக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜெலன்ஸ்கி அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை போர் நீடிக்கும் என கூறப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஷ்யா இப்படி ஒரு திட்டம் தீட்டியது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் விவகாரம் எதிரொலி.. ரஷ்ய அமைச்சர் பேச ஆரம்பிச்சதும் நடந்த சம்பவம்.. ஐநா சபையில் நடந்த ஷாக்..!
மற்ற செய்திகள்