இனிமே விசா இல்லாமலேயே ரஷ்யாவுக்கு போகலாம்.. விளாடிமிர் புதின் சொன்ன தகவல்.. காரணம் இதுதானா..?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா - ரஷ்யா இடையே விசா இன்றி பயணிக்கும் நடைமுறையை கொண்டுவர ரஷ்ய அதிபர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சுற்றுலாவாசிகளை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Also Read | யம்மாடி எவ்வளவு இருக்கு.. படையெடுத்த முதலைகள்.. உறையவைக்கும் வீடியோ.. அதிகாரிகள் கொடுத்த விளக்கம்..!
நன்றி
உஸ்பெகிஸ்தானின் சில்க் ரோடு நகரத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) ஆண்டு உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது ரஷ்ய அதிபரை சந்தித்த மோடி இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக புது தில்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பல தசாப்த கால உறவை மோடி நினைவுகூர்ந்தார். போர் சமயத்தில் உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்க உதவி செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாக மோடி தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் பழமையான வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் மீது ரஷ்ய மக்கள் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பில் இந்தியா - ரஷ்யா இடையே விசா இன்றி சுற்றுலா வசதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடைபெறும் என புதின் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ அரசு ஊடகம் TASS செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலா
முன்னதாக மும்பையில் மாஸ்கோ பெருநகர சுற்றுலாக் குழுவின் துணைத் தலைவர் அலினா அருட்யுனோவா, இந்திய சுற்றுலாக் குழுக்களுக்கு விசா இல்லாத நடைமுறையை ரஷ்யா அறிமுகப்படுத்தக்கூடும் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"சுற்றுலா பயணிகளுக்கு விசா இன்றி பயணிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என அதிபர் தெரிவித்திருந்தார். முன்னதாக ஈரானுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிற்கும் இந்த வசதி அளிக்கப்படலாம்" எனத் தெரிவித்திருந்தார்.
CIS -ல் அங்கம் வகிக்காது ரஷ்யாவிற்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி, இந்தியா மற்றும் துருக்கி ஆகியவை முன்னிலை வகிப்பதாக அருட்யுனோவா தெரிவித்திருந்தார். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 13,000 இந்தியர்கள் ரஷ்யாவிற்கு சுற்றுலா வந்திருப்பதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை ரஷ்யா சுற்றுலாத்துறை எட்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
மற்ற செய்திகள்