ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் நடந்த பயங்கரம்.. உக்ரைனில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதும் 6-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைனில் மக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாடும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் நாட்டிலுள்ள மக்கள் பலரும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதேபோல் உக்ரைனில் படித்துவரும் இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையம் சென்றபோது குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், உக்ரைன்-ரஷ்யா போரில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்