Russia – Ukraine Crisis: இந்தியர்களை காப்பாத்தியே ஆகணும்.. 4 அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த புது அசைன்மென்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதனை தொடர்ந்து சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தனர். கடல், தரை மற்றும் வான் என மும்முனை தாக்குதலை முன்னெடுத்து வருகிறது  ரஷ்யா. இதனால் உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒருபுறத்தில் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தி இருக்கிறது உக்ரைன். நாட்டை காப்பாற்ற முன்வருபவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்திருக்கிறார். இந்நிலையில், உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகத்திற்கு அழைத்துவர பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது மத்திய அரசு.

Russia – Ukraine Crisis: இந்தியர்களை காப்பாத்தியே ஆகணும்.. 4 அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த புது அசைன்மென்ட்..!

IPL 2022 : பல கஷ்டம் தாண்டி சாதித்த இந்திய வீரருக்கு.. பஞ்சாப் கிங்ஸ் அணி கொடுத்த கேப்டன் பொறுப்பு..

4 அமைச்சர்கள்

போர் பதற்றம் காரணமாக, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இது குறித்து முக்கிய ஆலோசனை ஒன்றினை நடத்தினார் பிரதமர் மோடி. பல்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் நான்கு இந்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

யார் யார்?

ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜ்ஜு,  ஹர்தீப் பூரி, விகே சிங் ஆகிய நான்கு அமைச்சர்களும் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு உடனடியாக பயணிக்க இருக்கிறார்கள்.

Russia – Ukraine Crisis: 4 Ministers To Go For Evacuation operation

உக்ரைன் நாட்டில் சுமார் 1.6 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்திய மாணவர்களில் பலர் மெட்ரோ ஸ்டேஷன்கள், பாழடைந்த பேஸ்மெண்ட் என பல இடங்களில் பதுங்கி உள்ளனர்.

போர் காரணமாக பாதுகாப்பான அண்டை நாடுகளுக்கு இந்திய மாணவர்களை அழைத்துச் சென்று பின்னர் ஏர் இந்தியா மூலமாக  அவர்களை இந்தியா அழைத்துவருவதே அரசின் திட்டம். இதற்காகவே 4 அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணிக்க இருக்கின்றனர்.

எந்தெந்த நாடுகள்?

உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக் குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவுக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரிக்கு ஹர்தீப் பூரி -யும் போலந்திற்கு விகே சிங் அவர்களும் பயணிக்க இருக்கிறார்கள்.

விரைவில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

"உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க".. ‘முக்கிய பதவி பறிப்பு’.. புதினுக்கு ஷாக் கொடுத்த அமைப்பு..!

RUSSIA UKRAINE WAR, UKRAINE CRISIS, EVACUATION OPERATION, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன், அமைச்சர்கள்

மற்ற செய்திகள்