உக்ரைன் மீது தாக்குங்கள்.. போரை அறிவித்த ரஷ்யா.. புதின் உத்தரவால் பெரும் சிக்கல்
முகப்பு > செய்திகள் > உலகம்உலகமே இப்போது ரஷியா - உக்ரைன் போர் குறித்த நடவடிக்கைகளை அச்சத்துடன் கவனித்து வருகிறது. என்ன ஆனாலும் உக்ரைன் மீது போர் தொடுப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இதற்காக சுமார் ஒன்றரை லட்சம் ரஷிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகளுக்கு தக்க பதிலடி தரப்படும் எனவும் புதின் எச்சரித்துள்ளார்.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும்.. வீடு வீடாக சென்று கேக் வழங்கிய சுயேச்சை வேட்பாளர்.. என்ன காரணம்?
என்னதான் சிக்கல்?
சோவியத் யூனியன் காலத்தில் உலகின் பெரும் நாடாக தன்னை அறிவித்துக்கொள்ள அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போட்டிபோட்டுக்கொண்டு வேலை பார்த்தன. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது துவங்கி அணு ஆயுதங்களை உருவாக்குவது வரை ஒவ்வொரு துறையிலும் இரு நாடுகளுக்கு இடையே மறைமுக, நேரடி போட்டிகள் நிலவிவந்தன.
இந்தக் காலத்தில் அதாவது சோவியத் யூனியன் உடைவதற்கு முன்பு, அணு ஆயுத ஆராய்ச்சியில் இறங்கிய ரஷ்யா தனது நாட்டின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனில் அதற்க்கான தளவாடத்தை அமைத்திருந்தது. உக்ரைனில் பெரும் தொகையை கொட்டி ஆராய்ச்சியை முடுக்கிவிட்டது சோவியத் யூனியன். ஆனால், 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவு பட்டது. இதனால் உக்ரைன் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இதை தனிப்பட்ட இழப்பாக கருதியது ரஷ்யா.
உக்ரைனின் அமைவிடம்
இது ஒருபக்கம் என்றால், உக்ரைன் ஒரு புறம் ரஷ்யாவையும் மற்றொருபுறம் ஐரோப்பாவையும் எல்லைகளாக கொண்டுள்ளது. உக்ரைனின் ஒரு பகுதியினர் ரஷ்யாவை ஆதரிக்கின்றனர். மீதியுள்ளோர் ஐரோப்பாவை. இந்த வேறுபாடு ஒரு கட்டத்தில் ஐரோப்பிய, அமெரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் அங்கம் வகிக்க விரும்புவதாக உக்ரைன் அறிவிக்கும் வரையில் சென்றது. இது தான் ரஷியாவின் இந்த போர் முடிவிற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
உக்ரைன் நேட்டோவின் அங்கமாக சேர்வதை தங்களது பிராந்தியத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக ரஷ்யா நினைக்கிறது. இதன் காரணமாகவே உக்ரைனை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ரஷ்யா முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, 2014-ம் ஆண்டு உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஆக்கிரமித்து தன் வசமாக்கியது.
போர் பிரகடனம்
இந்நிலையில், ரஷியாவுக்கு வெளியே ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்குமாறு அந்த நாட்டு நாடாளுமன்றத்திடம் அதிபர் புதின் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மேலவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரஷியாவுக்கு வெளியே ராணுவ சக்தியை பயன்படுத்துவதற்கான புதினின் கோரிக்கையை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். அதை தொடர்ந்து, ரஷிய படைகளை வெளிநாட்டில் பயன்படுத்துவதற்கான அதிகாரம் புதினுக்கு வழங்கப்பட்டது.
இதனால், உக்ரைனின் எல்லை பகுதியில் வீரர்களை குவித்திருந்த ரஷ்யா இன்று தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
தாக்குதல்
நவீன காலத்தில் மிகப்பெரிய போராக கருதப்படும் இதனை தற்போது துவங்கி பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறது ரஷ்யா. சற்று நேரம் முன்னர், உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்துள்ளார்.
உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தும் ரஷ்யா, அதனை கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக உக்ரைன் மீது போரை துவங்கி இருக்கிறது. இது மிகப்பெரிய அழிவை நோக்கி செல்லும் என உலக தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை
மற்ற செய்திகள்