'விண்வெளியில ஏகப்பட்ட பிரச்சனை...' 'ஒரே ஒரு தேயிலை இலையால...' 'எல்லா பிரச்சனையும் சரி ஆயிடுச்சு...' - வியக்க வைத்த விண்வெளி ஆச்சரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறுகளை உடனடியாக சரிசெய்து விட்டதாக ரஷ்ய விண்வெளித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி அறை, கழிப்பறை மற்றும் உணவு தயார் செய்யும் அடுப்பு போன்றவற்றில் கோளாறுகள் எழுந்தது.
ஐ.எஸ்.எஸ்ஸின் ரஷ்ய பிரிவில் உள்ள கழிப்பறை ஒழுங்கற்றதாகவும், குழுவினருக்கு ஆக்ஸிஜனை வழங்க பயன்படும் நீர் அமைப்புகள் காலியாக இருப்பதாகவும், உணவை அடுப்பில் வேக வைப்பதில் தடை இருப்பதாகவும் விண்வெளி குழுவினர் தெரிவித்தனர்.
நாசாவின் கிறிஸ் காசிடி மற்றும் விண்வெளி வீரர்களான அனடோலி இவானிஷின் மற்றும் இவான் வாக்னர் ஆகிய ஆறு நபர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் வியாழக்கிழமை அன்று அதிகாலை பூமிக்கு வருவதற்கு தயாராகி வரும்போது பிரச்சினைகள் எழுந்தன.
இந்த நிலையில் காஸ்மோனாட் அனடோலி இவானிஷின் ஒரு பையில் இருந்து தேயிலை இலைகளை ஸ்வெஸ்டா சர்வீஸ் மாட்யூலின் பரிமாற்ற அறையில் வெளியிட்டார். தொகுதியின் தகவல் தொடர்பு உபகரணங்கள் அருகே சுவரில் ஒரு கீறலை நோக்கி இலைகள் மெதுவாக மிதந்தன, இது காற்று கசியும் விரிசல் என்பதற்கான சான்று ஆகும். உடனடியாக கேப்டன் டேப்பைப் பயன்படுத்தி கசிவைத் தடுத்ததாக ரஷ்ய விண்வெளித்துறை தெரிவித்து உள்ளது.
விண்வெளி ஆய்வு நிலையத்தை தாக்கும் சமீபத்திய தொழில்நுட்ப பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஆகவே குழுவினர் சமீபத்திய வாரங்களில் பல சிக்கல்களை நிர்வகிக்க வேண்டியிருந்தது. சுற்றுப்பாதை ஆய்வகத்தின் முதல் தொகுதி இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 1998-ல் தொடங்கபட்டது. எனவே அதை நவீன படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதே போல் கடந்த வாரம், ஸ்வெஸ்டா தொகுதியில் ஆக்ஸிஜன் வழங்கல் முறை தோல்வியடைந்தது. இது தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக என்று ரஷ்ய விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்