'ரஷ்யாவின் அதிபயங்கர அணு ஆயுதம்!'.. 'உலகின் எந்த மூலையில்.. எப்போ வேணா அந்த சம்பவம் நடக்கலாம்!'.. அரளவிட்ட பிரிட்டன் அதிகாரி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பல வருடங்களாக பூமியை சுற்றும் திறனுடைய அணு ஆயுதம் ரஷ்யாவிடம் இருப்பதாக பிரிட்டானிய பாதுகாப்பு  உளவுத்துறை தலைவர் பயங்கர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'ரஷ்யாவின் அதிபயங்கர அணு ஆயுதம்!'.. 'உலகின் எந்த மூலையில்.. எப்போ வேணா அந்த சம்பவம் நடக்கலாம்!'.. அரளவிட்ட பிரிட்டன் அதிகாரி!

பிரிட்டன் உளவுத்துறையின் தலைவரான lieutenant general jim hockenhull, ரஷ்யா புதிதாக உருவாகியுள்ள Skyfall missile எனும் ஏவுகணை பூமியைச் சுற்றி பல ஆண்டுகள் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி அந்த ஏவுகணையால் என்ன பிரச்சினை என்றால் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யாவால் எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் திடீரென ஒரு அணு ஆயுத தாக்குதலை நிகழ்த்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ரஷ்யாவில் உள்ள nyonoska என்கிற இடத்தில் 9m730 burevestnik missile skyfall எனும் ஏவுகணையை வைத்து செய்யப்பட்ட பரிசோதனையில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 5 விஞ்ஞானிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்தால் கதிரியக்க பாதிப்பு காரணமாக சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அளவை விட ஆயிரம் மடங்கு பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த ஏவுகணை 2025 வாக்கில் ஏவுவதற்கு தயாராகும் என்றும் தெரிகிறது.

மற்ற செய்திகள்