Radhe Others USA
ET Others

‘திடீர் திருப்பம்’.. போர் முடிவுக்கு வருகிறதா? ரஷ்ய அதிபர் புதின் சொன்ன முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அதிபர் புதின் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

‘திடீர் திருப்பம்’.. போர் முடிவுக்கு வருகிறதா? ரஷ்ய அதிபர் புதின் சொன்ன முக்கிய தகவல்..!

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 20-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனாலும்

இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பொருளாதார தடைகளை அறிவித்தது. ஆனால் அதையெல்லாம் ரஷ்யா ஒரு பெரிய விஷமாக பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிடையேயும் பதற்றம் நீடித்த படியே உள்ளது.

போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்தைகளும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

Russia President Putin says positive shifts in talks with Ukraine

இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா சார்பில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பின்னர் விரிவாகப் பேசுகிறேன். அதேவேளையில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது. அது வலுவானதாகவே மாறும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என புதின் கூறியுள்ளார். அதனால் விரையில் போர் முடிய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

RUSSIA, UKRAINE, PUTIN, WAR

மற்ற செய்திகள்