'கொரோனா' மருந்துக்கு 'ரஷ்யா வைத்த பெயர்...' '11ம்தேதி' முதல் நோயாளிகளுக்கு 'வழங்க திட்டம் ...' விரைவில் 'முழு விவரங்களை' வெளியிடுவதாக 'விளக்கம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யா அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

'கொரோனா' மருந்துக்கு 'ரஷ்யா வைத்த பெயர்...' '11ம்தேதி' முதல் நோயாளிகளுக்கு 'வழங்க திட்டம் ...' விரைவில் 'முழு விவரங்களை' வெளியிடுவதாக 'விளக்கம்...'

ஆர்டிஐஎஃப் என்ற ரஷ்ய நிறுவனத்தின் உதவியுட்ன்  கெம்ரார் என்னும் மருந்துநிறுவனம் அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது கொரோனாவைக் கட்டப்படுத்துவதில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தமருந்து ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்ததையடுத்து வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு வழங்க உள்ளதாக ஆர்டிஐஎஃப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணம் பெறவும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு மாதத்தில் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபேவிபிரவிர் என்னும் மருந்தில் சில மாற்றங்கள் செய்து அவிஃபேவிர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், இதுகுறித்த விவரங்களை இருவாரங்களில் வெளியிட உள்ளதாகவும் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்