'அழகா இருக்கேன்ல... அந்த வயித்தெறிச்சல் தான் அவங்களுக்கு!'.. 'ஒரே ஒரு வீடியோவால் வந்த சிக்கல்'!.. முன்னாள் ராணுவ வீராங்கனையின் பகீர் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் வீராங்கனை ஒருவர், அழகிப் பட்டம் வென்றதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

'அழகா இருக்கேன்ல... அந்த வயித்தெறிச்சல் தான் அவங்களுக்கு!'.. 'ஒரே ஒரு வீடியோவால் வந்த சிக்கல்'!.. முன்னாள் ராணுவ வீராங்கனையின் பகீர் வாக்குமூலம்!

ரஷ்யாவைச் சேர்ந்த பெண், அன்னா க்ரம்சோவா (வயது 32). அந்நாட்டு ராணுவத்தில் வீராங்கனையாக பணியாற்றி வந்தவர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்தியாவிலும், உலக அளவிலும் பெண்களுக்கிடையே அழகிப் போட்டி நடைபெறுவது போல, ரஷ்யாவின் ராணுவத்தில் 'National Guard Beauty pageant' என்ற தேசிய பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று பிரத்யேகமாக நடைபெறும்.

இந்நிலையில், அன்னா அந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால், அவருடைய இந்த வெற்றி, சக வீராங்கனைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பிக்னி உடைகள் உடுத்தி கொண்டு, கட்டு மஸ்தான உடலோடு (fitness) இருப்பது தான் தனக்கு பிடிக்கும் என்று அவர் ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.

ஏற்கெனவே, அன்னா அழகின் மீது பொறாமை கொண்டவர்களுக்கு இந்த வீடியோ நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அதை பயன்படுத்தி, அவருடன் பணியாற்றும் சக வீராங்கனைகள் செய்த சதியால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து பேசிய அன்னா, "நான் ராணுவத்தில் அழகிப் பட்டம் வென்றது பலருக்கு பிடிக்கவில்லை. என் மீது கொண்ட பொறாமையால் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்