உக்ரைனுக்கு வந்த ஐ.நா. தலைவர்.. திடீரென ரஷ்யா செய்த அதிர்ச்சி காரியம்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களை ஐநா பொதுச்செயலாளர் சென்றபோது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு வந்த ஐ.நா. தலைவர்.. திடீரென ரஷ்யா செய்த அதிர்ச்சி காரியம்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்..!

Also Read | திடீரென மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்..!

உக்ரைன்-ரஷ்யா இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த சூழலில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், ‘மிகக் கொடூரமான வலிகளையும், உணர்வுகளையும் உக்ரைன் தாங்கி நிற்கிறது’ எனக் கூறினார்.

Russia confirms strike on Kyiv during UN visit

இதனை அடுத்து உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு அருகே உள்ள பகுதியை அன்டோனியோ குட்டெரெஸ் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்துக்கு சற்று தொலைவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.ஐநா பொதுச்செயலாளர் பார்வையிட சென்ற நேரத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்து தொடர்பாக ரஷ்யாவும் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதல் ஐநா-வை அவமதிக்கும் செயல் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

RUSSIA, STRIKE, KYIV, UN, UKRAINE, VOLODYMYR ZELENSKY, ANTONIO GUTERRES

மற்ற செய்திகள்