"40 வருஷமா பெருசு ஆகிட்டே போகுது.." திகில் கிளப்பும் 'மர்ம' பள்ளம்.. 282 அடி ஆழம் சொல்லும் 6.5 லட்ச வருட ரகசியம்??.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாளுக்கு நாள் இந்த உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும், இந்த உலகின் மூலையில் நடக்கும் ஏதாவது ஒரு விஷயம், தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது.

"40 வருஷமா பெருசு ஆகிட்டே போகுது.." திகில் கிளப்பும் 'மர்ம' பள்ளம்.. 282 அடி ஆழம் சொல்லும் 6.5 லட்ச வருட ரகசியம்??.. பின்னணி என்ன?

Also Read | "ஒரே பிரசவத்துல 4 குழந்தை'ங்க.. அதுலயும்" கர்நாடக தம்பதிக்கு நடந்த அதிர்ஷ்டம்.. ஆச்சரியத்தில் பாராட்டும் மக்கள்

உதாரணத்திற்கு Bermuda Triangle, Area 51 என இது போன்று நிறைய விஷயங்களை கூறலாம். இதனை சுற்றியுள்ள மர்மங்களை பல வளர்ச்சிகள் நடந்து கொண்ட பிறகும், கண்டுபிடிப்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில், ரஷ்யாவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று, மக்கள் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

'மர்ம' பள்ளம்

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில், பெரிய பள்ளதாக்கு ஒன்று உருவாகி உள்ளது. இந்த குழி தற்போது உருவாகவில்லை என்றாலும், இதன் ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்வது தான் மக்களை பீதி அடைய செய்துள்ளது. கடந்த 1980 கால கட்டத்தில், இந்த குழி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நாளாக நாளாக இதன் ஆழம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

russia Batagaika Crater growing and pulling everything around

முதலில் இந்த பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப்பட்ட போது, இதன் ஆழம் 6 அடி கூட இல்லை. தொடர்ந்து, கடந்த வாரம் இந்த குழியின் அளவை மீண்டும் அளந்து பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது குழியின் ஆழம் சுமார் 282 அடி இருந்ததாக கூறப்படுகிறது. அதே போல, இதன் அகலமும் சுமார் 1 கிலோ மீட்டர் வரை இருந்துள்ளது. கடந்த 40 வருடங்களாக இந்த குழியின் ஆழம் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், தற்போது ராட்சச குழியாகவும் இது மாறியுள்ளது.

மண் அடுக்கு சொல்லும் ரகசியம்

இந்த குழியை அப்பகுதியில் வாழும் மக்கள் இன்னொரு உலகிற்கான பாதை என்றும், நகரத்தின் வாய் என்றும் பல பெயரில் குறிப்பிட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 20 முதல் 30 மீட்டர் வளர்ந்து வரும் இந்த பள்ளத்தாக்கு, அருகிலுள்ள அனைத்தையும் விழுங்கிக் கொள்ளும் வகையில் மாறி வருகிறது. அதே போல, இந்த குழியின் கீழே செல்ல செல்ல, பூமியின் பழைய அடுக்குகள் தெரியப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சுமார் 6.50 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மண் அடுக்குகள், 282 அடியின் கீழ் இருக்கலாம் என்றும் கருதப்படுகுறது.

காரணம் என்ன?

மேலும், இந்த பள்ளத்தாக்கின் ஆழம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. உறைபனி நிலங்கள் உருக தொடங்கியதன் விளைவாக, இது போன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உலகம் முழுக்க வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால் தான் இந்த விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

russia Batagaika Crater growing and pulling everything around

நாளுக்கு நாள் இதன் அளவும் அதிகரித்து, அருகேயுள்ள பகுதியை விழுங்கிக் கொண்டே போகும் என்றும், இது போல உலகில் இன்னும் நிறைய பள்ளங்கள், உலக வெப்பமயமாதல் காரணமாக நிகழலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read | "இதுக்கு மேலயும் அவ தாங்கிக்க மாட்டா.." யாசகம் செய்து சேர்த்த பணத்தில்.. கணவர் கொடுத்த அன்பு பரிசு..

Nenjuku Needhi Home
RUSSIA, BATAGAIKA CRATER, RUSSIA BATAGAIKA CRATER

மற்ற செய்திகள்