'உலகின் 2வது கொரோனா தடுப்பூசியும் Ready!!!'... '3வது தடுப்பூசியும், அதிவிரைவில்??!'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள'... 'அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்!...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரசஸுக்கு எதிராக 3வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

'உலகின் 2வது கொரோனா தடுப்பூசியும் Ready!!!'... '3வது தடுப்பூசியும், அதிவிரைவில்??!'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள'... 'அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்!...

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில்  பல்வேறு உலக நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதில் பல நாடுகள் கணிசமான வெற்றியைப் பெற்று தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார்.

Russia Approves 2nd Vaccine EpiVacCorona After Sputnik-V 3rd Coming

'ஸ்புட்னிக்-வி' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ள சூழலில், இந்தியா உள்பட பல நாடுகளும் அந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பரிசோதனை செய்துவருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக மீண்டும் அதிரடி அறிவிப்பை ஒன்றை ரஷ்ய அதிபர் வெளியிட்டுள்ளார்.

Russia Approves 2nd Vaccine EpiVacCorona After Sputnik-V 3rd Coming

எபிவேக்கொரோனா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சைபீரியாவில் உள்ள வெக்டர் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதும், அதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த போதும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Russia Approves 2nd Vaccine EpiVacCorona After Sputnik-V 3rd Coming

இந்த தடுப்பூசியின் 3ஆம் கட்டபரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் எனவும், அதில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதால் 3ஆம் கட்ட பரிசோதனை முழுமையடைவதற்கு முன்பே எபிவேக்கொரோனா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Russia Approves 2nd Vaccine EpiVacCorona After Sputnik-V 3rd Coming

மேலும் இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், செயின் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்த சுவ்மகோவ் நிறுவனத்தின் மேலும் ஒரு தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதானையில் உள்ளதாகவும், கூடிய விரைவில் கொரோனாவுக்கான 3வது தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்