cadaver Mobile Logo Top
Viruman Mobiile Logo top

சுரங்க பாதையில் சிக்கிய நபர்.. 8 மணி நேரத்துக்கு அப்புறம் மீட்ட 'போலீஸ்'.. "அவரு அங்க எப்படி சிக்குனாருன்னு தெரிஞ்சப்போ ஷாக் ஆயிடுச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இத்தாலியின் ரோம் பகுதயில், இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் சிக்கிக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அதன் பின்னர் அவர்களுக்கு தெரிந்த விஷயம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுரங்க பாதையில் சிக்கிய நபர்.. 8 மணி நேரத்துக்கு அப்புறம் மீட்ட 'போலீஸ்'.. "அவரு அங்க எப்படி சிக்குனாருன்னு தெரிஞ்சப்போ ஷாக் ஆயிடுச்சு"

Also Read | "நாலு வருஷமா இதான் பண்ணுறாரு.." வேலையே பாக்காம சம்பளம் வாங்கும் வாலிபர்.. மிரண்டு போன நெட்டிசன்கள்

ரோம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சாலை ஒன்று இடிந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில், சாலைக்கு அடியே இருந்த சுரங்கப்பாதையில் ஒருவர் சிக்கிக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு அடியே சிக்கி இருக்கும் நபரை மீட்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

rome tunnel collapse thief inside who rescued by police

இதற்காக, அந்த நபர் சிக்கி இருந்த சுரங்கப் பாதையை அடைவதற்காக, சாலை பகுதியில் குழி ஒன்றை தூண்டியதாக கூறப்படுகிறது. சாலையில் துளை போட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதைக் காண அப்பகுதியிலும் ஏராளமான பொது மக்கள் கூடி உள்ளனர். மொத்தமாக சுமார் 8 மணி நேரம் வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருந்த நபரை அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.

rome tunnel collapse thief inside who rescued by police

முன்னதாக, உள்ளே 8 மணி நேரம் சிக்கி இருந்த அந்த நபர், பயத்தில் என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றி விடுங்கள் என கெஞ்சியதாகவும், அதிக நேரம் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது என கத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, மீட்கப்பட்ட அந்த நபருக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகளை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் எப்படி அங்கே சிக்கிக் கொண்டார் என்பது தான், சற்று பதற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், அங்கே பயன்படுத்தாமல் இருந்து வந்த ஒரு கடையில் இருந்து, சுமார் 4 பேர் சுரங்க பாதை ஒன்றை அமைத்து வந்துள்ளனர்.

rome tunnel collapse thief inside who rescued by police

பொது விடுமுறை காரணமாக, அங்குள்ள பிரபல வங்கி ஒன்றில் கொள்ளை அடிப்பதற்காக சுரங்க பாதையை மண்ணுக்கு அடியில் அமைத்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், அவர்கள் சாலை பகுதிக்கு அடியே சுரங்கம் தோண்டி சென்ற போது, திடீரென சாலையில் விரிசல் ஏற்பட, அதில் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உள்ளார். இதனைக் கண்ட மற்ற திருடர்கள் பதறி போகவே, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அங்கிருந்து தப்பித்தும் சென்றதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், மீட்புக் குழு அந்த நபரை மீட்டு கைது செய்ததுடன் மட்டுமில்லாமல், தப்பித்து செல்ல முயன்ற மற்ற திருடர்களையும் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. திருடர்கள் சிலர், சுரங்க பாதை அமைத்து திருட முயன்று பின்னர் இப்படி சிக்கிக் கொண்ட சம்பவம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "நான் மறுபிறவி எடுக்க போறேன்.." திரைப்படம் பாத்துட்டு இளைஞர் எடுத்த முடிவு.. கடைசியில் நடந்த 'விபரீதம்'!!

POLICE, ROME, TUNNEL, THIEF, RESCUE

மற்ற செய்திகள்