'100 அடி உயரத்தில் சென்ற பயணிகள்.. 'எதிர்பாராமல் உடைந்த ரோலர் கோஸ்டர்..'.. பதற வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்தீம் பார்க் ஒன்றில் ரோலர் கோஸ்டர் உடைந்ததால், பயணிகளுக்க்கு நேர்ந்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற தீம் பார்க்கான, அல்டன் டவர்ஸின் ரோலர் கோஸ்டர் வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் இருப்புப் பாதை பிரேக் ஆகியதால், பயணிகள் அந்த ரோலர் கோஸ்டரில் இருந்தபடி செங்குத்தாக தொங்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இவ்வாறு அந்தரத்தில் தொங்கிய மக்கள் அனைவரும், அதன் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டதோடு, இவர்களுள் ஒருவருக்கு கூட காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தீம் பார்க்கின் ரோலர் கோஸ்டர் பிரேக் ஆகி, 20 நிமிடம் செங்குத்தாக,ம் 100 அடி உயரத்தில் தொங்கிய திகிலான அனுபவம் தங்களுக்கு மிரட்டலான அனுபவத்தைக் கொடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த தீம் பார்க் நிறுவனம், நடந்த இந்த தொழில்நுட்ப சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
At Alton Towers and staying over in a pod with Sam. Nearly stuck on the Smiler tho... pic.twitter.com/DhSE3A25nn
— Terry Brooks (@TerryBpne) July 23, 2019