"சீட் பெல்ட் போடல".. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த காவல்துறை.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியாததால் அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"சீட் பெல்ட் போடல".. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த காவல்துறை.. வீடியோ..!

இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் -உடன் இறுதி சுற்றுவரையில் முன்னேறினார் ரிஷி. ஆனால், லிஸ் ட்ரஸ் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில், சமீபத்தில் லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று வடக்கு இங்கிலாந்து பகுதிக்கு ரிஷி சென்றிருக்கிறார். அப்போது காரில் பயணித்தபடி வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அரசின் சமீபத்திய திட்டங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது காரின் பின்பக்க இருக்கையில் ரிஷி அமர்ந்திருக்க, அவர் சீட் பெல்ட் ஏதும் அணியவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இங்கிலாந்து பிரதமர் சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து லங்காஷைர் மாகாண காவல்துறை ரிஷிக்கு அபராதம் விதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து, ரிஷி தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இங்கிலாந்து முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

 

RISHI SUNAK, SEAT BELT, UK, FINE

மற்ற செய்திகள்