உலகின் செங்குத்தான ரோலர் கோஸ்டர்.. ஆசையோடு ஏறிய சாகச பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அரண்டுபோன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகவும் செங்குத்தான ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்ற சம்பவம் இங்கிலாந்தில் பலரையும் திகிலடைய வைத்துள்ளது.

உலகின் செங்குத்தான ரோலர் கோஸ்டர்.. ஆசையோடு ஏறிய சாகச பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அரண்டுபோன அதிகாரிகள்..!

Also Read | படகு மேலே விழுந்த திமிங்கிலம்.. உறைந்துபோன பயணிகள்.. உலக வைரல் வீடியோ..!

ரோலர் கோஸ்டர்

இங்கிலாந்தின் பிரபல தீம் பார்க்குகளுள் ஒன்று பிளாக்பூல் ப்ளெஷர் பீச் (Blackpool Pleasure Beach). 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தீம் பார்க்கில் இருக்கும் ரோலர் கோஸ்டர் அப்போதைய காலகட்டத்தில் உலகின் மிக உயரமான மற்றும் செங்குத்தான ரோலர் கோஸ்டராக இருந்தது. சாகச பிரியர்களுக்கு சவால் விடும் இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்க பலரும் விரும்புவது உண்டு. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ரோலர் கோஸ்டரில் பயணித்த நபர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Riders Get Stuck At 235 Feet After Rollercoaster Malfunction

கோளாறு

ஞாயிறுக்கிழமை மதியம் இந்த ரோலர் கோஸ்டரில் வழக்கம்போல மக்கள் ஏறினர். உற்சாகமாக மக்கள் சத்தம் எழுப்பிய நிலையில் பயணமும் துவங்கியது. ரோலர் கோஸ்டர் டிராக்கின் உச்சத்தை அடைந்த நேரத்தில், திடீரென ரோலர் கோஸ்டர் நின்றுவிட்டது. தரையில் இருந்து 235 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் நின்றவுடன் அதில் பயணித்த மக்கள் அனைவரும் பதற்றமடைந்தனர். அப்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ரோலர் கோஸ்டர் நின்றுவிட்டதாக தீம் பார்க் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Riders Get Stuck At 235 Feet After Rollercoaster Malfunction

நடந்து சென்ற மக்கள்

235 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் நின்றதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் சிலர் அதிலிருந்து இறங்கி டிராக்கின் வழியே நடந்தே கீழே வந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்திருக்கிறது தீம் பார்க் நிர்வாகம்.

இந்த ரோலர் கோஸ்டரில் இதுபோன்று சம்பவம் நடப்பது இது புதிதல்ல. 1994 ஆம் ஆண்டு இந்த ரோலர் கோஸ்டர் துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே இதில் பயணித்த 26 பேர் காயமடைந்தனர். 2000 ஆம் ஆண்டும் இந்த ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 20 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Riders Get Stuck At 235 Feet After Rollercoaster Malfunction

பிரபல பிளாக்பூல் ப்ளெஷர் பீச்-ல் உள்ள செங்குத்தான ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்ற நிலையில், அதில் பயணித்த மக்கள், டிராக் வழியாக இறங்கிவந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

RIDERS, STUCK, ROLLERCOASTER, ROLLERCOASTER MALFUNCTION, ரோலர் கோஸ்டர்

மற்ற செய்திகள்