‘கொரோனா தடுப்பூசி’!.. ‘அந்த நாடுகளெல்லாம் இப்பவே வாங்க ஒப்பந்தம் போட்டுட்டாங்க’.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆக்ஸ்பாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு பணக்கார நாடுகள் போட்டி போடுவதாகவும், பல முன்னணி மருந்து நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

‘கொரோனா தடுப்பூசி’!.. ‘அந்த நாடுகளெல்லாம் இப்பவே வாங்க ஒப்பந்தம் போட்டுட்டாங்க’.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆக்ஸ்பாம்..!

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதில் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை எந்தொரு தடுப்பூசியும் சந்தைக்கு பகிரங்க விற்பனைக்கு வரவில்லை.

இந்த நிலையில் உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள பணக்கார நாடுகள், முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளின் டோஸ்களை பாதிக்கும் மேலாக வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு விட்டதாக ஆக்ஸ்பாம் (Oxfam) தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம்,‘தேவைப்படும் அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் இந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினருக்கு 2022ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது’ என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உலக மக்களில் பெரும்பாலோனர் தடுப்பூசிக்கு தேவையான அளவை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் லாப நோக்கில் தனது தடுப்பூசி டோஸ்களை பணக்கார நாடுகளுக்கு வழங்க வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மூன்றில் இரு பங்கு டோஸ்களை வளரும் நாடுகளுக்கு அளிக்க உறுதி தந்துள்ளதாகவும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு உலக பொருளாதாரத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவாகும் என ஆக்ஸ்பாம் தொண்ட நிறுவனம் கணித்துள்ளது.

மற்ற செய்திகள்