"நாம நெனைக்குற மாதிரி எல்லாம் இல்ல... 'இயல்பு' நிலைக்கு திரும்ப லேட் ஆகலாம்.." - எச்சரிக்கும் 'நிபுணர்கள்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், பல உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் மிகவும் தீவிரமாக இறங்கி வருகின்றனர்.

"நாம நெனைக்குற மாதிரி எல்லாம் இல்ல... 'இயல்பு' நிலைக்கு திரும்ப லேட் ஆகலாம்.." - எச்சரிக்கும் 'நிபுணர்கள்'!!

சில நாடுகளின் தடுப்பு மருந்து சோதனைகளில் நல்ல முடிவைத் தந்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே தடுப்பு மருந்து கிடைக்கலாம் எனவும் பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. ஆனால், 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வருவோம் என அமெரிக்காவின் தொற்று நோய் மருத்துவ நிபுணர் அந்தோணி பவுசி (Dr Anthony Fauci) தெரிவித்துள்ளார்.

'உலக நாடுகள் தயாரித்து வரும் தடுப்பு மருந்துகளில் ஏதேனும் ஒன்று அவசரகால அங்கீகாரத்தை பெற்றாலும் கூட, அது உடனடியாக அனைவருக்கும் கிடைத்திடாது' என அந்தோணி தெரிவித்துள்ளார். மேலும், ஒரு அரசு தடுப்பு மருந்தை அனைவருக்கும் செலுத்தி முடிக்கவே அடுத்த ஆண்டு இறுதியை எட்டி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் சுமார் 28 மில்லியன் மக்கள் வரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் கொரோனா தொற்று மூலம் இருப்போர் விகிதமும் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்