ஹோட்டல் ஊழியருக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் கொடுத்த நபர்.. கோர்ட்டுக்கு போன உரிமையாளர்.. லாஸ்ட்ல தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உணவக பணியாளர் ஒருவருக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் நபர் ஒருவர். இதனையடுத்து அவர்மீது உணவாக உரிமையாளர் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்திருந்தது பலரையும் குழம்ப செய்திருக்கிறது.
பொதுவாக உணவகங்களில் உணவு பரிமாறும் நபர்களுக்கு பணம் கொடுப்பதை மக்கள் வாடிக்கையாக செய்துவருகின்றனர். நாடுகள் பேதம் இல்லாது உலகம் முழுவதிலும் இந்த நடைமுறை இருக்கிறது. ஊழியரை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களை மக்கள் முன்னெடுக்கிறார்கள். உலகம் முழுவதும் ஹோட்டல் ஊழியர்கள் பில் தொகையில் 15 முதல் 20 சதவீதம் வரையில் டிப்ஸாக பெறுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. ஆனால், அமெரிக்காவை சேர்ந்த மரியானா லாம்பர்ட் என்பவருக்கு ஹோட்டல் பில் தொகையில் 963 சதவீதம் டிப்ஸாக கிடைத்திருக்கிறது. இதை பார்த்தவுடன் அவரால் இதனை நம்பவே முடியவில்லை.
டிப்ஸ்
அமெரிக்காவின் Scranton நகரில் உள்ளது அல்பிரேடோ கஃபே. இங்கே உணவு பரிமாறும் பணியை செய்துவருகிறார் மரியானா லாம்பர்ட். சமீபத்தில் இந்த உணவகத்திற்கு ஒருவர் வந்திருக்கிறார். 13 டாலருக்கு சாப்பிட்ட அவரிடம் அதற்குரிய பில்லை கொடுத்திருக்கிறார் மரியானா. அப்போது, 3000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 2.3 லட்ச ரூபாய்) டிப்ஸாக கொடுத்திருக்கிறார் அந்த நபர். இதனால் மரியானா லாம்பர்டுக்கு கண்ணீரே வந்துவிட்டது. இந்த பில்லின் புகைப்படம் சமூக வலை தளங்களிலும் வைரலானது.
3000 டாலர்
இதனையடுத்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்த மிகப்பெரிய டிப்ஸ் தொகையால் சந்தேகமடைந்த உணவக உரிமையாளர் அவர் மீது வழக்கு தொடர முடிவெடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேசிய உணவக உரிமையாளர் சக்கரி ஜேக்கப்சன்,"டிப்ஸ் வழங்குவது யதார்த்தமானது. ஆனால், இது நிறைய முட்டாள்தனத்தையும் நாடகத்தையும் வெளிப்படுத்துகிறது. அதனால், துரதிஷ்டவசமாக, நாங்கள் இதை மாஜிஸ்ட்ரேட் அலுவலகம் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, ஹோட்டல் ஊழியருக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் வழங்கிய அந்த நபர் "டிப்ஸ் ஃபார் ஜீசஸ்" என்ற சமூக ஊடக இயக்கத்தின் ஒருபகுதியாக இவ்வாறு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அமெரிக்கா முழுவதிலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்