LIGER Mobile Logo Top

இவ்வளவு நாளா இப்படி ஒன்னத்தான் தேடிட்டு இருந்தாங்க.. பக்கத்துலயே இருந்திருக்கே .. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பரபர அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெருங்கடல்களால் சூழப்பட்ட கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அங்கு மனிதர்கள் உயிர்வாழ தேவையான அம்சங்கள் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வளவு நாளா இப்படி ஒன்னத்தான் தேடிட்டு இருந்தாங்க.. பக்கத்துலயே இருந்திருக்கே .. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பரபர அறிவிப்பு..!

Also Read | "கே எல் ராகுல் கல்யாணம் எப்போ?".. நடிகர் சுனில் ஷெட்டி பகிர்ந்த விஷயம்??.. வெளியான அதிரடி தகவல்!!

விண்வெளி எப்போதுமே பல ஆச்சர்யமான உண்மைகளை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. ஆதிகாலம் முதலே விண்வெளி குறித்த ஆய்வில் மனிதர்கள் ஈடுபட்டுவந்தாலும், விண்வெளி ஆய்வில் மனிதகுலம் செல்லவேண்டிய தூரம் இன்னுமே நிறைய உள்ளது. வெளிச்சத்துக்கு வராத பல கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார்கள். அந்தவகையில் முக்கியமானது பூமியை போலவே மனிதர்கள் வசிக்க தகுதியான கிரகங்களை கண்டுபிடிப்பது. இதற்காக பல திட்டங்களை உலக நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Researchers found Unique New Water World Close To Earth

பெருங்கடல் கிரகம்

கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியில் இருந்து 100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தை ஆய்வு செய்துவருகிறது. இதில் பெருங்கடல்கள் இருக்கலாம் எனவும் இதன் காரணமாக அங்கே மனிதர்கள் உயிர்வாழ தேவையான சூழ்நிலை இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். TOI-1452 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் முழுவதும் கடல்நீரால் சூழப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

டிராகன் விண்மீன் மண்டலத்தில் அமைந்திருக்கும் இந்த கிரகம் சூரியனை விட சிறிய நட்சத்திரம் ஒன்றை சுற்றிவருகிறது. இதனை வியாழனின் நிலவுகளான கேனிமீட் மற்றும் காலிஸ்டோ மற்றும் சனியின் நிலவுகளான டைட்டன் மற்றும் என்செலடஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள். ஏனெனில் இவற்றில் பெருமளவு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Researchers found Unique New Water World Close To Earth

ஆராய்ச்சி

இதுகுறித்து பேசிய மாண்ட்ரீல் பல்கலைக்கழக பேராசிரியரும், கிரக ஆராய்ச்சி திட்டத்தின் இயக்குனருமான ரெனே டோயன்,"முழுவதும் கடல்களால் சூழப்பட்ட இந்த கிரகத்தை மேலும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்த இருக்கிறோம்" என்றார். TOI-1452 கோளில் அதன் நிறையுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத அளவு நீர் இருக்கலாம் என நம்பப்படுகிறது. பூமியை போல சுமார் 5 மடங்கு பெரிதான இந்த கோளில் நீர் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் விண்வெளி ஆராய்ச்சியில் அது மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Also Read | "என்னோட கிரிக்கெட் வாழ்க்கை'லயே".. தோனி குறித்து கோலி போட்ட 'Emotional' பதிவு.. மனம் உருகிய கிரிக்கெட் ரசிகர்கள்

RESEARCHERS, WATER WORLD, EARTH

மற்ற செய்திகள்