உலகத்தின் மிகப்பெரிய செடி.. அதுவும் கடலுக்குள்ள.. அடேங்கப்பா இவ்வளவு கிலோமீட்டருக்கா வளந்திருக்கு.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய தாவரம் ஆஸ்திரேலிய கடலில் வளர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகத்தின் மிகப்பெரிய செடி.. அதுவும் கடலுக்குள்ள.. அடேங்கப்பா இவ்வளவு கிலோமீட்டருக்கா வளந்திருக்கு.!

Also Read | "மனித உடலுக்குத் தேவையான முக்கிய பொருட்கள் அங்க இருக்கு".. ஆராய்ச்சியாளர்களை திகைக்க வச்ச சிறுகோள்.. வரலாற்றிலேயே முதல் முறையாம்..!

மேற்கு ஆஸ்திரேலியாவின் Shark Bay பகுதியில் இருக்கும் கடலில் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள், கடலுக்கு அடியே பிரம்மாண்ட செடி வளர்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது உலகின் மிகப்பெரிய பரப்பளவில் வளர்ந்துள்ள தாவரம் எனக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், இது 200 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது கிளாஸ்க்கோ நகரத்தை விட பெரியது என்றும், மான்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Researchers Discover World Largest Plant in Australia

விபத்து

மரபணு சோதனையின் போது எதிர்பாராத விதமாக இந்த தாவரத்தை கண்டறிந்ததாக கூறும் ஆய்வாளர்கள்,"முதலில் இது கடல் புல்வெளி என நினைத்தோம். ஆனால், ஒரே விதையில் இருந்து முளைத்த செடி என்பது பின்னர் தான் தெரியவந்தது. இது 4,600 ஆண்டுகள் பழமையான தாவரமாகும். இது 180 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தச் செடி வளர்ந்திருக்கிறது" என்றனர்.

ஆய்வின்படி, இந்த தாவரமானது "பாசிடோனியா ஆஸ்ட்ராலிஸ்" கடற்பாசியின் ஒற்றை குளோன் எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இது உலகின் மிகப்பெரிய கடற்பாசிகளுக்கு முதன்மையான எடுத்துக்காட்டு இது எனவும் கூறியுள்ளனர்.

Researchers Discover World Largest Plant in Australia

ஆச்சர்யம்

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியலாளரும் ஆய்வு இணை ஆசிரியருமான எலிசபெத் சின்க்ளேர் இதுபற்றி பேசுகையில், "நாங்கள் தரவுகளை பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டோம். இவை அனைத்தும் ஒரே தாவரத்திற்கு சொந்தமானது என்பது திகைப்பை ஏற்படுத்தியது" என்றார்.

Researchers Discover World Largest Plant in Australia

இந்த வகை தாவரம் அதிகளவில் பூக்கவோ விதைகளை தோற்றுவிக்கவோ செய்வதில்லை என கண்டறிந்துள்ள உயிரியலாளர்கள்," பல ஆயிரம் ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு இது வளர்ந்திருப்பது மேலும் ஆச்சரியமளிக்கிறது" என்றனர். ஆஸ்திரேலிய கடலில் சுமார் 200 கிலோமீட்டர் சதுர அளவிற்கு ஒரே தாவரம் வளர்ந்திருப்பது உயிரியலாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | மொத்த பழங்குடிக்கும் ராஜா.. ஆனாலும் இப்படி ஒரு நிலைமை.."எல்லாம் என் மக்களுக்காக தான்".. கலங்கவைக்கும் பின்னணி..!

RESEARCHERS, WORLD LARGEST PLANT, AUSTRALIA, RESEARCHERS DISCOVER, மிகப்பெரிய செடி

மற்ற செய்திகள்