இந்த முள் உரசினாலே இப்படியான எண்ணம் வருமா? .. உலகின் மிக ஆபத்தான செடியா?.. அதை வளர்க்கும் மனிதர் கூறுவது என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகிலேயே மிகவும் ஆபத்தான செடி ஒன்றை நபர் ஒருவர் வளர்த்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இதற்கான காரணம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த முள் உரசினாலே இப்படியான எண்ணம் வருமா? .. உலகின் மிக ஆபத்தான செடியா?.. அதை வளர்க்கும் மனிதர் கூறுவது என்ன?

Also Read | AAVIN MILK PRICE HIKE: ஆவின் அரை லிட்டர் ஆரஞ்ச் பால் விலை 6 ரூபாய் உயர்வு.!

செடிகள் என கேட்டதும் பச்சை பசேல் என ஒருவித புத்துணர்ச்சியை தரக் கூடிய வகையில் தான் இருக்கும். ஆனால், அதே வேளையில் ஆபத்துகளை விளைவிக்கும் செடிகள் கூட நிறைய உள்ளது.

அப்படி உள்ள செடிகளில் இலைகள், முட்கள் உள்ளிட்ட விஷயங்கள் மனிதர்கள் உடலில் பட்டால் கூட அவை மிக பெரிய அளவிலான ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் தான் இருக்கும்.

அப்படி ஒரு செடியை தான் தனது வீட்டில் வளர்த்து வருகிறார் ஒருவர். இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்தவர் டேனியல் எமிலின். உலகிலேயே ஆபத்தான செடியாக அறியப்படும் "Gympy Gympy" என்ற செடியை தான் வளர்த்து வருகிறார். மிகவும் மோசமாக பாதிப்பை தரக் கூடிய இந்த செடியில் அதன் இலைகள் உள்ளிட்டவற்றின் மீது சிறு சிறு முட்கள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Reportedly Man Grows Worlds Most Dangerous Plant At Home

இதனை தொட்டாலே நமது உடலில் மிகவும் கடுமையான வலி ஏற்பட்டு பல மாதங்களுக்கு இதன் மூலம் ஏற்பட்ட வலியும் வீக்கமும் அப்படியே இருக்கும் என்றும் தெரிகிறது. அதே போல, நாளுக்கு நாள் இதன் மூலம் உருவாக கூடிய வலி அதிகரித்து கொண்டே இருக்கும் என்றும் இந்த முட்களில் உள்ள விஷமானது நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடிய வகையிலும் இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

அதே போல, இந்த முட்கள் நன்றாக குத்தி விட்டால் மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வரும் அபாயம் கூட உள்ளது என்றும் தெரிகிறது.

இப்படிப்பட்ட ஆபத்துள்ள ஜிம்பி ஜிம்பி செடியை ஏன் டேனியல் எமிலின் என்ற நபர் வளர்த்து வருகிறார் என்ற கேள்வியும் குழப்பமும் பலருக்கும் இருக்கலாம். இதற்கு அவர் சொல்லும் காரணம் தான் பலரையும் நடுங்க வைத்துள்ளது. யாருக்கும் ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக கூண்டில் வைத்து ஜிம்பி ஜிம்பி செடியை வளர்க்கும் டேனியல், வெளியே டேஞ்சர் என்ற குறியீடையும் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Reportedly Man Grows Worlds Most Dangerous Plant At Home

இது பற்றி பேசும் டேனியல் எமிலின், "செடிகளை வளர்ப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சாதாரண செடிகளை வளர்த்து வளர்த்து போர் அடித்து விட்டது. இதனால், ஆபத்தான இந்த செடி எது என்பதை இணையத்தில் தேடி, ஆன்லைனில் இந்த செடிகளின் விதைகளை ஆர்டர் செயது வாங்கினேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read | சென்னை : துக்க நிகழ்வுக்காக துபாயில் இருந்து வந்த குடும்பம்.. ஃபிரிட்ஜ் வெடித்து பலியான சோகம்.!

MAN, GROWS, MOST DANGEROUS PLANT, HOME

மற்ற செய்திகள்