கடையை இடிக்கும்போது கண்டுபிடிக்கப்பட்ட குழி.. தோண்டி பார்த்துட்டு உறைஞ்சு போன ஊழியர்கள். இதுக்கு மேலயா இவ்ளோ வருஷம் கடை இருந்துச்சு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் பலசரக்கு கடையை இடிக்கும் போது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்லறை ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
Also Read | வித்தியாசமா நடந்துக்கிட்ட பயணி.. செக் பண்ணதும் அதிர்ந்த அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் பரபரப்பு..!
இங்கிலாந்தின் வேல்ஸில் உள்ள பெம்ப்ரோக்ஷயர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது. சமீபத்தில் இதனை இடிக்க நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி கட்டுமான பணியாளர்கள் இங்கே வேலைக்கு வந்திருக்கின்றனர். கடை இடிக்கப்பட்டு, இறுதியாக கீழே இருந்த தளத்தை தோண்டியிருக்கின்றனர் பணியாளர்கள். அப்போது, உள்ளே இருந்து மனித எலும்புக்கூடுகள் வெளிவந்திருக்கிறது.
இதனால் அதிர்ந்துபோன பணியாளர்கள் இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அப்படியே இந்த செய்தி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக அந்த பகுதிக்கு படையெடுத்த ஆராய்ச்சியாளர்கள் அந்த பகுதி முழுவதையும் சல்லடை போட்டு சலித்திருக்கின்றனர். அதில், 240 பேரின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த எலும்புகளை ஆய்வுக்காக அவர்கள் அனுப்பியுள்ளனர். மேலும், இங்கே பல வயதினருடைய உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சுமார் 1256 இல் டொமினிகன் துறவிகளால் நிறுவப்பட்ட செயின்ட் சேவியர்ஸ் பிரியரி எனும் இடம் இதுவாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இங்கே கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புக்கூடுகளில் கடுமையான காயங்களும் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Dyfed தொல்பொருள் அறக்கட்டளையின் தள மேற்பார்வையாளர் ஆண்ட்ரூ ஷோப்ரூக் இதுபற்றி பேசுகையில்," சில எலும்பு கூடுகளில் மோசமான பாதிப்புகள் இருக்கின்றன. இவை, போரில் பங்கேற்கும்போது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம். 1405 ஆம் ஆண்டில் ஓவைன் க்ளிண்டரால் இந்த நகரம் முற்றுகையிடப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். அப்போது நடந்த தாக்குதலால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம்" என்றார்.
இது புதைக்கப்படுவதற்கு மிகவும் மதிப்புமிக்க இடமாக இருந்திருக்க கூடும் என கணித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், பணக்காரர்கள் முதல் பொது மக்கள் வரை இங்கே புதைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்த கல்லறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து ஆராய்ச்சிகள் மத்திய கால இங்கிலாந்து குறித்த புது பார்வையை வழங்கும் எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்