பெண்களா...? அப்படினா யாரு...? '42 வருஷம் காட்டுக்குள் வாழ்ந்த ரியல் டார்ஜான்...' - பின்னணியில் அதிர வைக்கும் ஃப்ளாஸ்பேக்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வியட்நாம் நாட்டை சேர்ந்த Ho Van Lang என்பவரின் குடும்பம் வியட்நாம் போருக்கு முன்பு வரைக்கும் எல்லா மனிதர்களையும் போல சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
1972-ம் ஆண்டு நடந்த வியட்நாம் போரின் போது அமெரிக்கா வீசிய ஒரு குண்டு Ho Van Lang-ன் அம்மாவையும் இரண்டு அண்ணன்களையும் பறித்துக் கொண்டது. இத்தனை நேரம் உயிரோடு தன் முன்னே நடமாடிக் கொண்டிருந்த தங்கள் அன்பிற்குரிய மூவர் தன் கண் முன்னால் இறந்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரும் தந்தையும் மற்றும் Tri என்ற சகோதரர் என மூன்று பேரும் Quang Ngai மாகாணத்தில் உள்ள Tay Tra மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் சென்றனர், அதற்கு பிறகு அங்கிருந்து வெளியேறவே இல்லை. காட்டிகுல்லேயே வாழ தொடங்கினர்.
எந்த காரணத்திற்காகவும் ஊர் பகுதிகளுக்கோ, நகரத்திற்கோ அவர்கள் திரும்பவே இல்லை, போர் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நம்பியதால் தான் காட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர். மலைத்தேன், காட்டு விலங்குகள், பழங்கள் என கிடைப்பதை சாப்பிட்டு காட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 42 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே மனிதர்களை பார்த்ததாகவும், அப்போதெல்லாம் மனிதர்களை கண்டு பயந்து நடுங்கியுள்ளனர். மனிதர்கள் மீது தீராத பயம் ஏற்பட்டுள்ளது.
தனித்துவமான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரான Alvaro Cerezo, 2015-ம் ஆண்டு Ho Van Lang-ன் குடும்பத்தினரை பார்த்துள்ளார். காட்டுக்குள்ளே அவர்களை தேடிச் சென்று அவர்களோடு பேசியுள்ளார். இதன் மூலம் மீண்டும் Ho Van Lang-ன் குடும்பத்தை கிராமம் ஒன்றுக்கு அழைத்து வந்து பிற மக்களைப் போல் அவர்களும் வாழ முயற்சி மேற்கொண்டார்.
Ho Van Lang-ற்கு அதுவரை பெண்கள் என்னும் ஒரு இனம் இந்த பூமியில் இருப்பதே தெரியாது. ஆனால் தற்போது அவர் பெண்களை பார்த்து அவர்களுடன் வசித்து வருகிறார். இருப்பினும் பெண்களுக்கும், ஆண்களுக்குமான வித்தியாசம், வேறுபாட்டினை அவரால் தற்போதும் இனம் காண முடியவில்லை. மேலும் Lang-ற்கு செக்ஸ் குறித்து எதுவுமே தெரியாது என்கிறார் புகைப்படக் கலைஞர் Alvaro Cerezo.
தற்போது நாகரிக மனித வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுள்ள லேங், தற்போதைய உலகம் மிகவும் சத்தமாக இருப்பதாக தெரிவிக்கிறார். மேலும் மிருகங்கள் மனிதர்களோடு பழகுவதை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது, காட்டுக்குள் மிருகங்கள் எங்களைக் கண்டால் பயந்து ஓடும்.
Lang-ன் தந்தையின் உடல்நிலை மிகுந்த பாதிப்புக்குள்ளானதால் மட்டுமே காட்டுக்குள் இருந்து வருவதற்குசம்மதித்தார்கள் என புகைப்படக் கலைஞர் கூறியுள்ளார்.
டார்ஜான் என்ற காட்டு மனிதன் பற்றிய படத்தைப் போல் உண்மையான டார்ஜானாக வாழ்ந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்