“நாங்க ரெடி!”.. 'உலக லெவல் அந்தர் பல்டி'!.. “இப்பவாச்சும் இந்த யோசனை வந்துச்சே!” - வரவேற்கும் இணையவாசிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய சீன எல்லை பிரச்சினை காரணமாக நடந்த தாக்குதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.
இதனையடுத்து டிக்டாக் உட்பட சீனாவின் 50 முக்கியமான செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்து இந்திய அரசு அதிரடியாக முடிவெடுத்தது. இந்த பரபரப்பான சூழல்களுக்கு பிறகு தற்போது இந்தியாவுடன் இணக்கமாக செல்வதற்கு சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்சீனக் கடலில் ஏற்கனவே தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் எப்போதும் சர்ச்சைக்குரிய பகுதியாக தென்சீனக்கடல் விளங்கத் தொடங்கிவிட்டது. சீனா தங்கள் ராணுவ பயிற்சியை அங்கு மேற்கொள்வதற்கு, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனுடையே சீன கம்யூனிச அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லி இதழில் சீன வெளியுறவுத்துறை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவு, போர் பதற்றத்தைத் தவிர்ப்பது, எல்லைப் பிரச்சினையை சுமூகமாகப் பிரித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் சீனா விரைவில் இறங்க உள்ளதாகவும், இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டரின் நகரில் சீன அதிபர் தலைமையில் இது தொடர்பாக ஒரு முக்கிய ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, சீனா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் இந்த வேளையில் சில அண்டை நாடுகளுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்