'ஆகஸ்ட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி'... 'பிரிட்டனில் இது நடக்கலாம்'... எச்சரித்த சுகாதார செயலாளர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 100,000 கோவிட் பாதிப்புகள் வரை இங்கிலாந்தில் நிகழலாம் என்று புதிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் இன்று தெரிவித்தார்.

'ஆகஸ்ட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி'... 'பிரிட்டனில் இது நடக்கலாம்'... எச்சரித்த சுகாதார செயலாளர்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று இரவு பேசுகையில், ஜூலை மாதம் 19-ஆம் திகதி நாடு சகஜ நிலைக்குத் திரும்பும் என அறிவித்தார். மேலும் தற்போது உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் இன்று காலை பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் “ஜூலை 19-ஆம் திகதி வரும்போது, ​​பாதிப்பு எண்ணிக்கை இப்போது இருப்பதை விட இரு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், எனவே ஒரு நாளைக்கு 50,000 பேர் புதிதாகப் பாதிக்கப்படலாம் " எனக் கூறினார்.

Rates of long Covid likely to increase significantly in UK

அதேநேரத்தில் "ஆகஸ்ட் ​​மாதத்தில் அவை கணிசமாக உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்போது ஒரு நாளைக்கு 100,000க்கும் மேற்பட்டோர் புதிதாகப் பாதிக்கப்படலாம். பாதிப்பு எண்ணிக்கை, இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு கடுமையாகப் பலவீனமடைந்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்