‘இப்டி பண்ணிட்டாங்களே’!.. உலகத்துல இருந்த ஒரேயொரு ‘வெள்ளை ஒட்டகச்சிவிங்கி’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் அரியவகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கி வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இப்டி பண்ணிட்டாங்களே’!.. உலகத்துல இருந்த ஒரேயொரு ‘வெள்ளை ஒட்டகச்சிவிங்கி’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!

உலகிலேயே அரியவகை உயிரினமாக கருதப்படும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் கென்யாவில் மட்டுமே இருக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டில்தான் முதன்முதலாக வெள்ளை ஒட்டகச்சிவிங்கி கென்யாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றைக் காண்பதற்காக உலகம் முழுவதும் சுற்றுலா பல சுற்றுலா பயணிகள் கென்யாவுக்கு வந்தனர்.

இந்த நிலையில் தாய் ஒட்டகச்சிவிங்கியும், அதன் குட்டியும் நேற்று எலும்புகூடுகளாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒட்டகங்ச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இவை இறந்து நான்கு மாதம் ஆகியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகில் இருந்த ஒரேயொரு வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் குட்டி மரம் நபர்களால் வேட்டையாடப்பட்ட சம்பவம் உலக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

KILLED, WHITEGIRAFFES, KENYA